அஜீத் மகள் அனோஷ்கா அரங்கேற்றம்! கலகலப்பாகுது கலாஷேத்ரா

சென்னையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்று கலாஷேத்ரா! பரதநாட்டிய கலையின் கோவிலாக திகழும் இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து கூட மாணவிகள் வந்து நாட்டியம் கற்றுக் கொள்கிறார்கள். இங்குதான் அஜீத்-ஷாலினி தம்பதிகளின் மகள் அனோஷ்காவும் நாட்டியம் கற்றுக் கொள்கிறாராம். சுமார் 7 வயதாகும் அனோஷ்காவின் முதல் அரங்கேற்றம் நாளை ஞாயிற்றுக் கிழமை இங்கு நடைபெறவிருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் அங்கு படிக்கும் மாணவிகளின் குடும்பத்தினர் கலாஷேத்ராவுக்கு வரும் வழக்கமுண்டு. நாளை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் அனோஷ்காவின் நாட்டியம் இருப்பதால், அனுமதி கடுமையாக்கப்பட்டிருக்கிறதாம்.

அஜீத், ஷாலினி, ஷாம்லி மற்றும் தாத்தா பாட்டி உள்ளிட்ட அஜீத் உறவினர்கள் அங்கு திரளவிருப்பதால் இப்பவே களை கட்டி வருகிறதாம் கலாஷேத்ரா காம்பவுண்ட்! மகளின் திறமையை கண்ணார கண்டு களிப்பதை விட சிறந்த வெற்றி எது இருக்க முடியும்? அதனால் வேதாளம் படப்பிடிப்பு முடிந்தும் முடியாமலும் பேட்ச் வொர்க்காகத் தொடரும் இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை முழு நேர லீவு எடுத்துக் கொண்டிருக்கிறாராம் அஜீத்.

ஹ்ம்ம்… நடுவில் நடிகர் சங்கத் தேர்தலுக்காகவும் ஓட்டு போடணுமே!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
MSG-2 Breaks into 300 Crore Club as Fans Celebrate with 126 Houseful Shows in Delhi

Close