அங்க தொட்டு இங்க தொட்டு அஜீத் வரைக்கும் வந்திட்டாரு கானா பாலா!
‘நடுக்கடலுல கப்பல எறங்கி தள்ள முடியுமா… ?’ இப்படியொரு புதுக்குரலாக கோடம்பாக்கத்தில் ஒலித்தபோது, ஒட்டுமொத்த சினிமாக்காரர்களும் ‘அமுக்குரா அவர…’ என்று கானா பாலாவை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள். இந்த வியாதி இல்லாத சினிமாக்காரர்களே இல்லை என்கிற அளவுக்கு ஜெயிச்சவங்க பின்னால ஓடுற வழக்கம் தொடர்கிறது. பவர்ஸ்டார் சீனிவாசனை எப்படியோ கூட்டி பெருக்கி ஒரு காமெடி நடிகராக்கினார் சந்தானம். அதற்கப்புறம் என் படத்திலும் அவரை நடிக்க வைக்கிறேன் என்று கிளம்பிய கூட்டம் எல்லா ரசிகர்களையும் கடிச்சு வச்ச கதைதான் மக்களுக்கு தெரியுமே?
இப்படி இருவரையும் கடிச்சு ருசிச்சு கடைசியில துப்பியும் விட்டார்கள். இப்போதெல்லாம் படத்தில் கானா பாலாவின் குரல் கேட்டாலே பொம்பளைங்களும் தம்மடிக்க எழுந்து ஓடுவதால் மிரண்டு போயிருக்கிறது சினிமாவுலகம். ஏற்கனவே அவரை வச்சு பாட்டு எடுத்தாச்சு. இனிமே என்ன பண்ணுறதாம்? என்கிற தயக்கத்தில் இருக்கிறார்கள் பலர்.
இந்த நிலையில்தான் வெளியுலகம் தெரியாத ஹாரிஸ் ஜெயராஜ், அவரை தன் இசையில் பாட வைத்திருக்கிறார். அதுவும் ஊர் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படத்திற்காக!
படு லோக்கலாக உருவாகிவரும் அதாரு உதாரு பாடலில்தான் கானா பாலாவின் கை வண்ணம். எழுதியதும் அவரே. பாடியதும் அவரேதானாம். இந்த குரலுக்கு முதல் முறையாக வாயசைக்கப் போகிறார் அஜீத். கேட்கும்போதே கிடுகிடுங்குதேப்பா…!