ராஜராஜ சோழனாக அஜீத்? ரசிகர்களின் பாகுபலி கனவு நிறைவேறுமா?

பாகுபலி ஜுரம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடருமோ தெரியாது. ஆனால் அந்த டைப் படங்களில் கவனம் செலுத்தும் இயக்குனர்களுக்கு கைநிறைய கல்கண்டு கொடுத்தேயாக வேண்டும். ஏனென்றால் இதில் நடிக்கப் போகிற அத்தனை ஹீரோக்களும் முன்னணி இடத்தில் இருப்பவர்கள் மட்டுமே! கொட்டுகிற பணத்தை அறுவடை செய்ய வேண்டும் என்றால், ஜெய்யோ, சிபியோ…. நடக்குமா அதெல்லாம்? இல்லை… அதையெல்லாம் சகிக்கதான் முடியுமா?

சரி, விஷயத்துக்கு வருவோம். அறிந்தும் அறியாமலும் துவங்கி சமீபத்தில் வந்த யட்சன் வரைக்கும், நானும் டைரக்டர்தான் என்று காமா சோமா படம் எடுத்த விஷ்ணுவர்த்தன், திடீரென பாகுபலி ஆசையில் களமிறங்கிவிட்டார். பாலகுமாரன் எழுதிய ஒரு கதையை சினிமாவுக்கு ஏற்றார் போல மாற்றும் வேலையில் மும்முரமாகிவிட்டாராம். தஞ்சை பெரிய கோவிலையும், ராஜராஜ சோழன் வரலாற்றையும் பின்னணியாக கொண்ட இந்தக் கதையை அதீத ஆர்வத்தோடு அணுகி வரும் விஷ்ணுவர்த்தனுக்கு தன்னால் ஆன அத்தனை உதவிகளையும் செய்து வருகிறாராம் எழுத்தாளர் பாலகுமாரன்.

அஜீத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த கதையை அவர் படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் என்று தகவல்கள் கசிகின்றன. தனது தொழில் போட்டியாளரான விஜய், புலி என்ற சரித்திரப்படத்தை கொடுத்த சில தினங்களிலேயே இப்படியொரு முயற்சியில் அஜீத் இறங்கியிருப்பது ஆரோக்கியமான அழகான அட்டகாசமான முயற்சி.

கலக்கோ கலக்குன்னு கலக்குற முயற்சிதான். விஷ்ணுவர்த்தன் இயக்குனர்ங்கிற விஷயம் மட்டும்தான் கலங்கோ கலங்குன்னு கலங்கடிக்குது!

1 Comment
  1. Kavirasu says

    Ithey Vijay panna poramai… ajith panna nalla muyarichi..intha pulapuku ?????? kudikalam

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வேற வழியில்ல… விஷால்தான்! கே.வி.ஆனந்த் முடிவு?

கனா கண்டேன், கோ, அயன் என்று ஏறுமுகத்திலிருந்த கே.வி.ஆனந்த், அதற்கப்புறம் இயக்கிய மாற்றான், அனேகன் படங்களால் சற்றே தலைக்குப்புற கவிழ்ந்ததை பற்றியெல்லாம் அதிகம் விவாதிக்கத் தேவையில்லை. ஏனென்றால்...

Close