அங்கு பாபா வந்தது எப்படி?

நம்ம உலகத்தோட டிரான்ஸ்பார்மர் இனி அவுட்தான் என்று இருட்டுக்குள் வாழ முடிவெடுக்கும் போதுதான் சிலருக்கு இறைவன் ‘டார்ச்’ அடிப்பான். அந்த டார்ச் வெளிச்சத்தை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் உணர்ந்த தருணம் எது?

‘ரொம்ப கஷ்டமா இருக்கே, ஒரு ஷிர்டி சாய்பாபா சிலையை வாங்கி ஆபிஸ்ல வைக்கலாமே’ என்று முடிவு பண்ணி இன்டர்நெட் மூலம் ஆர்டர் கொடுத்தாராம். சில தினங்கள் கழித்து அதை கொண்டு வந்தவர்கள் ஒரு பிரமாண்ட சிலையை லாரியிலிருந்து இறக்க ஆடிப்போனார் ரத்னம். ‘நாம கேட்டது டேபிளில் வைக்கிற சைஸ். இவங்க எடுத்துட்டு வந்ததோ, இவ்வளவு பெரிசு. திருப்பி அனுப்பவும் கூடாது. இதை வைக்க இடம் ஏது, பேசாம ஒரு கோவில்தான் கட்டணும்’ என்ற முடிவுக்கு வந்தார்.

தனது ஆபிஸ் வாசலிலேயே அந்த கோவிலை அமைத்தும் விட்டார். அன்றிலிருந்து அடித்தது யோகம். மறுநாளே அஜீத் அவரே விரும்பி அழைத்து கால்ஷீட் கொடுத்தார். ‘ஆரம்பம்’ ஆரம்பமானது. ஏ.எம்.ரத்னத்தின் நல்ல நேரமும் ஆரம்பம் ஆனது. இப்போது அந்த கோவிலுக்கு தினந்தோறும் வருகிற கூட்டம் எவ்வளவு தெரியுமா? சுமார் ஆறாயிரம் பேர்!

அவ்வப்போது அஜீத்தும் பேமிலியோடு வருகிறார். ஏ.எம்.ரத்னமும் அஜீத்துமே கூட ஒரு முறை சாய்பாபா அடக்கமாகியிருக்கும் ஷிர்டிக்கு சென்று வந்தார்களாம்.

Read previous post:
வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

ஒரு தண்ட சோறு, தடபுடல் விருந்தாவதுதான் கதை! கடந்த சில படங்களாகவே ரசிகர்களை ‘களி’ தின்ன வைத்த தனுஷ், இந்த படத்தில் முனியாண்டி, அஞ்சப்பர், சரவணபவன், வசந்தபவன்,...

Close