அஜீத்தா, கமலா? ஆரம்பித்தது போட்டி!
ஒரு கட்டத்துக்கு மேல் ‘விருதாவது, ஒண்ணாவது? வேலைய சின்சியரா பார்த்தா எல்லாப் புகழும் தானா வரும்’ என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நட்சத்திரங்கள். இருந்தாலும் வலிய வந்து கிடைக்கிற விருதை ‘வச்சு கொண்டாடுவதும்’ அவர்களுக்குப் பிடிக்கும். கிட்டதட்ட விருது குறித்த கொண்டாட்டங்களையெல்லாம் தாண்டிய மனநிலையில்தான் இருக்கிறார்கள் அஜீத்தும், கமலும். இருந்தாலும் அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் போலிருக்கிறது இங்கே.
மோஸ்ட் பிரஸ்டீஜியஸ் அவார்டு என்று சினிமா நட்சத்திரங்களால் கொண்டாடப்படுகிற விருது ஒன்று உண்டென்றால் அது பிலிம்பேர் விருதுதான். (பாதி சினிமாக்காரர்கள் தமிழ் படிப்பதில்லை. படிக்கவும் தெரியாது என்பதால் பிலிம்பேர், டைம்ஸ் ஆப் இந்தியா என்று அடிமையாகிக் கிடக்கிறார்கள் அந்த ஏரியாவில்) இந்த நிலையில்தான் இம்மாதம் நடைபெறுகிறது பிலிம்பேர் விருது விழா.
இதில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் பாபாநாசம் படத்திற்காக கமலும், என்னை அறிந்தால் படத்திற்காக அஜீத்தும், தனியொருவன் படத்திற்காக ஜெயம் ரவியும், அனேகன் படத்திற்காக தனுஷும் மோதுகிறார்களாம். வாக்கு யாருக்கு என்கிற பதற்றம் இப்பவே ஆரம்பித்திருக்கிறது.
ஒருவேளை அஜீத்திற்கு அப்படி இப்படி என்று துண்டு விழுந்தால், கமல் வீட்டு சாக்கடையை அடைச்சு சந்தி சிரிக்க வச்சுடாதீங்க அஜீத் பேன்ஸ்!
kamal is a pig. ajith rocks