குஷ்பு திமுகவிலிருந்து விலகியதற்கு அஜீத் காரணமா?
அதிகமில்லை, இரண்டு வாரங்களுக்கு முந்தைய நாட்களுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் அடித்தால் போதும். இந்த தலைப்புக்குள்ளிருக்கிற சின்னஞ்சிறு உண்மை பளிச்சென புரிந்து விடும். தன் சம்பந்தப்பட்ட இன்ப துன்ப கோப லாப விஷயங்கள் எதுவாக இருந்தாலும், பளிச்சென ட்விட்டரில் கொட்டிவிடுவது குஷ்புவின் இயல்பாக இருக்கிறது. அண்மையில் கட்சியிலிருந்து விலகிய விஷயத்தை கூட ட்விட்டரில்தான் முதலில் பகிர்ந்து கொண்டார் அவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, தங்களது சொந்தப்படத்தில் அஜீத் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றொரு தகவலை கசியவிட்டார் குஷ்பு. அஜீத்தை நேரில் சந்தித்து தங்கள் பேனரில், கணவர் சுந்தர்சி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என அவர் கேட்க, ‘ஆகட்டும் பார்க்கலாம்’ என்று பதிலளித்திருக்கிறார் அஜீத். இதைதான் சந்தோஷமாக தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார் குஷ்பு. இதையடுத்து அஜீத்தை தொடர்பு கொண்ட பலரும் இதே விஷயத்தை பற்றி கேட்க, சற்றே நெர்வஸ் ஆனார் அவர். குஷ்புவிடம், ‘இதை ட்விட்டர்ல பகிர்ந்திருக்கணுமா?’ என்று கேட்டாராம். அது மட்டுமல்ல, குஷ்பு திமுக பிரமுகராக இருப்பதால், அவரது சொந்த நிறுவனம் தாயரிக்கும் படத்தில் நடிக்கவும் தயங்கினாராம்.
மிரட்றாங்கய்யா… என்று அத்தனை பெரிய கூட்டத்தில் அப்போதைய முதல்வர் கலைஞரிடமே நேரடியாக பேசுகிற அளவுக்கு தைரியமான அஜீத், அதற்கப்புறம் ஏற்பட்ட சில கசப்பான நினைவுகளால் திமுக என்றாலே சற்று தள்ளி நின்று பார்க்க ஆரம்பித்திருந்தார். குஷ்பு விஷயத்திலும் அதுதான் நடந்தது என்கிறார்கள். கட்சியில் தனக்கு ஏற்பட்ட அவமானம், அதை தொடர்ந் சலிப்பின் காரணமாக குஷ்பு திமுக விலிருந்து விலகினாலும், அஜீத்தின் கால்ஷீட் கிடைக்கிற விஷயம் மட்டும் இந்த சம்பவத்தால் எளிதாகியிருக்கிறது.
குஷ்பு ட்விட்டரில் எழுதிய அஜீத் கால்ஷீட் விஷயம் இனிமேல் கைகூடலாம் என்பதுதான் இப்போதைய நிலைமை.
இப்படியாகப்பட்ட சிறப்புகள் வாய்ந்த பசுவை தென்னை மரத்தில் கட்டி வைத்தாயிற்றா?
சூப்பர் அந்து.