அஜீத்திடமிருந்து பதில் இல்லை! சூர்யாவுக்கு கொக்கிக் போடும் நயன்தாரா லவ்வர்!

‘நானும் ரவுடிதான்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியிருந்தாலும், இந்த நிமிஷம் வரைக்கும் எந்தக் கிளை எனக்கு சொந்தம்ணே தெரியலேப்பா… என்று சுற்றிக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இத்தனைக்கும் சரக்குள்ள இயக்குனர் என்று இன்டஸ்ட்ரியில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் கண்டிப்பாக விக்னேஷ் சிவனுக்கும் இடம் இருக்கிறது. நடுவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாகவும் ஒரு பேச்சிருந்தது. என்ன காரணத்தாலோ, அந்த திட்டம் பற்றிய பேச்சே இப்போது இல்லை.

நடுவில் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் என்று அஜீத்தை வளைக்க நினைத்த நயன்தாராவுக்கு, அங்கிருந்து முறையான பதில் இன்னும் வந்து சேரவில்லையாம். ஒரு சேஃப்டிக்கு சூர்யாவிடம் கதை சொல்லி வைக்கலாம் என்று அவர் வீட்டுக் கதவை தட்டிய விக்னேஷ் சிவனுக்கு உடனடியாக அழைப்பும் வந்ததாம். நல்லது. இந்த மரியாதையை அவர் காப்பாற்றிக் கொண்டாரா என்பதுதான் மிலியன் டாலர் கேள்வி.

மிக ஆர்வமாக கதை கேட்க உட்கார்ந்த சூர்யாவுக்கு, இரண்டு மணி நேரத்தில் தலை சுற்றாத குறையாக்கி விட்டாராம் விக்னேஷ். இந்த படத்தில் நயன்தாராதான் ஹீரோயினா இருப்பாங்க. அது தெரியும். ஆனால் ஹீரோ யார்னு சொல்லலையே என்று சூர்யாவே கேட்கிற அளவுக்கு போனதாம் நிலைமை. ஏன்?

விக்னேஷ் சிவன் சொன்ன கதை முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட். இதுல எனக்கெங்கய்யா வேலை இருக்கு? என்று சூர்யா கேட்காமலிருப்பாரா? அதைதான் நாகரீகமாக கேட்டு அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.

இருட்டுக்கு அஞ்சி கற்பூரத்தை கொளுத்தி தலை மேலேயே வைத்துக் கொண்டு திரிந்தானாம் ஒருவன். அந்த கதையாகதான் இருக்கு இந்தக்கதையும்!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வைத்தீஸ்வரன் கோவிலில் கவுதமி! கமல் உடல் நலம் பெற பிரார்த்தனை?

கடவுள் இல்லேன்னு சொல்லல... இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்! இது கமல் பேசிய வசனங்களில் ஒன்று. கடவுள் மறுப்பு கருத்துக்களுக்காக இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர் கமல். இராம...

Close