இன்னும் அஜீத் மட்டும்தான் வரல! கலைஞரும் காவேரி விசிட்டும்!

அடக்கடவுளே… மனுஷனுக்கு எவ்வளவு சோதனைகள்தான் வரும்? அவரும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே… என்றெல்லாம் ரசிகர்களை எண்ண வைக்கிறது அவரது செயல். யாருய்யா அவர்? என்று கேட்டு மண்டையை கசக்கி மாவு இடி இடிக்க வேண்டாம். அந்த அவர்தான் அஜீத்.

தமிழகத்தில் எந்த பிரளயம் வந்தாலும், “அவரு ஏதாச்சும் கருத்து சொன்னாராப்பா?” என்று தனக்குத்தானே கேட்டு, “சொல்லிட்டாலும்… அப்படியே காடு புரண்டு, கடல் அலையே நின்னுடும் போ!” என தனக்குத் தானே சமாதானமும் ஆகிவிடுகிறான் ரசிகன். இப்போது மீண்டும் அப்படியொரு சுச்சுவேஷன்.

கலைஞர் கருணாநிதி தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். எமனை வென்று கோபாலபுரம் வருவார் என்று அவரது அன்பு உடன் பிறப்புகள் காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் இந்தியாவின் ஜனாதிபதியிலிருந்து பிரதமரிலிருந்து நாட்டின் அதிகாரத்திலிருக்கிற அத்தனை பேரும் போனிலும் நேரிலும் விசாரிக்கிறார்கள். இவர்கள் போக, கலைஞருடன் பழகிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று அத்தனை பேரும் கலைஞர் அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனைக்கு வந்து விசாரித்துவிட்டும் செல்கிறார்கள்.

நேற்று ரஜினிகாந்த். இன்று விஜய், விவேக் என்று முன்னணி நட்சத்திரங்களும் வந்துவிட்டார்கள். இன்னும் வர வேண்டியவர் அஜீத் ஒருவர்தான். சொல்லப்போனால் மற்றவர்களை விட இந்த விஷயத்தில் அவர் வருவாரா என்றுதான் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். ஏன்?

கலைஞர் ஆட்சியில் இருந்தபோது நேருக்கு நேராகவே மிரட்றாங்கய்யா… என்று பேசி, திமுக உடன்பிறப்புகளை மிரள விட்டவராச்சே?

துயில் கலைந்து எழுந்து வா என் சிங்கமே… என்று எத்தனையோ முறை கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருக்கிறார். எங்கே…? துயில் கலைங்க பார்ப்போம் அஜீத். தலைவர் வெயிட்டிங்…!

4 Comments
 1. Rahul says

  எல்லாம் வந்தாச்சுயா…… ரீல மாத்து.

 2. Subu says

  No body expect this mannerless guy.

 3. TAMILARASAN says

  AJITH IS A SELFISH GAY,.

  1. singaram says

   aamaaa ivaru public service gay 🙂

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஸ்வாசம், என்.ஜி. கே படங்கள் தள்ளி வைப்பு! – விஜய் காரணமா?

https://www.youtube.com/watch?v=7hD593_juhA

Close