அஜீத் ஆர்டர்! லட்சுமிமேனன் ஹேப்பி! பணமா, குணமா, பாசமலர் தங்கச்சியே?

ஒத்த கேள்வி, நெத்தி சுருக்க வைக்கும்ல? அப்படியொரு கேள்விதான் இதுன்னு வைங்களேன்?

பாசமலர் படத்தின் ஹீரோயின் யாரு? சாவித்ரின்னுதானே பதில் வரும்? சிவாஜி ஹீரோன்னா, அவருக்கு தங்கையாக நடித்த சாவித்ரி எப்படி ஹீரோயினாக முடியும்? அந்தளவுக்கு அந்த தங்கை கேரக்டர் மனசுக்குள் புகுந்து புத்தியை தடுமாற வைக்குது இல்லையா? கிட்டதட்ட அப்படியொரு பதில்தான் வேதாளம் படத்தில் நடித்த லட்சுமிமேனன் விஷயத்திலும் வரப்போகிறது என்கிறார்கள் படத்தை பார்த்தவர்கள். ஹீரோயின் ஸ்ருதியாக இருந்தாலும், மொத்த பாராட்டுகளையும் அள்ளிக் கொண்டு போகிற இடத்தில் இருக்கிறாராம் லட்சுமிமேனன்.

இது ஒரு புறமிருக்க, வேதாளம் படத்திற்காக அவர் காட்டிய இன்வால்வ்மென்ட், அஜீத்தை அசர வைத்துவிட்டதாம். வார்த்தைகக்கு வார்த்தை தங்கச்சி என்றே லட்சுமிமேனனை அழைக்கிற அளவுக்கு இவரும் ஒன்றிப் போயிருக்கிறார். அதில்தான் ஒரு நல்ல விஷயமும் நடந்திருக்கிறது.

திடீரென ஒருநாள் தயாரிப்பாளரை அழைத்தவர், “லட்சுமிக்கு எவ்வளவு சம்பளம் பேசியிருக்கீங்க?” என்று கேட்டாராம். அவர்கள் ஒரு தொகையை சொல்ல, “இன்னும் ஐந்து லட்சம் சேர்த்துக் கொடுங்க. அது என் அன்பளிப்பாக இருக்கட்டும்” என்றாராம்.

பணம் ஒரு பொருட்டல்ல என்றாலும், அஜீத்தின் அளப்பறிய பாராட்டுடன் வந்த பணமாச்சே? உருகிப் போய்விட்டாராம் லட்சுமிமேனன்!

Read previous post:
யாருய்யா இந்த எம்பர்சியா? அடுத்த படத்துல ரஜினிக்கு ஜோடியா போட்டு அமுக்கு!

மேலேயிருக்கிற படத்திலிருப்பவர் எம்பர் சியா. மலேசியாவின் பிரபல விளம்பர அழகிகளில் ஒருவர். இவரை அழைத்துச் செல்லவும், ரஜினியை அழைத்துச் செல்லவும் ஒரே சொகுசு காரை ஏற்பாடு செய்ததால்...

Close