அந்த பிளாஷ்பேக்கை இப்போ நினைச்சாலும்… ஸ்ட்ரெயிட்டா ஒரு அஜீத் புராணம்!

‘என்னவோ தெரியலைப்பா… அவரு இப்பல்லாம் அப்படிதான் நடந்துக்குறாரு’ என்கிறார்கள் அஜீத் குறித்து. அதை சொல்வதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்! அதுவும் நமது நியூதமிழ்சினிமா.காம் வாசகர்களுக்காக. ‘காதல் கோட்டை’ படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கு முன்பு வரை அஜீத் ஒன்றும் பெரிய வெற்றிப்பட ஹீரோ இல்லை. அந்த படத்தின் டப்பிங் பணிகள் சென்னை சாலிகிராமத்திலிருக்கும் ஒரு ஸ்டூடியோவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவர் டப்பிங் பேச பேச, ஸ்பாட்டிலிருந்த டைரக்டர் அகத்தியன் கரெக்ஷன் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரொன்று நினைக்க, இவர் வேறு மாதிரியாக அதை புரிந்து கொண்டு பர்பாமென்ஸ் செய்ய… தான் ஒரு டைரக்டர் என்ற மிதப்பை காட்ட நினைத்தார் அகத்தியன். உனக்கு வராது. நீ கௌம்பு நான் வேற ஆளை வச்சு டப்பிங் பேசிக்கிறேன். அவர் கோபத்தில் அப்படி சொல்லிய பிறகும் அங்கே நின்று கொண்டிருக்க முடியாதல்லவா? மனசு நிறைய கனத்தோடு வெளியே வந்தார் அஜீத். இருந்தாலும், மீண்டும் தன்னை அழைத்தால் என்னாவது? அதே டப்பிங் தியேட்டரின் வாசலில் ஒரு நாள் முழுக்க நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது மனசுக்குள் ஒரு வெறி. நாம் இதே சினிமாவில் பெரிய ஹீரோவாக வெற்றி பெற்று கோடி கோடியாக சம்பளம் வாங்குவதற்குள், இப்போது நம்மை வெளியே தள்ளிய இந்த டப்பிங் தியேட்டரை விலைக்கு வாங்கிவிட வேண்டும். அந்த வெறி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. அதற்கேற்ப தமிழ்சினிமாவில் அஜீத்தின் அந்தஸ்தும் உயர்ந்து கொண்டே போனது. சொன்ன மாதிரியே வாலி படத்தின் வெற்றிக்கு பிறகு அந்த டப்பிங் தியேட்டரை விலைக்கு வாங்கினார். ஆனால் தனது பெயரில் அல்ல. தனது நண்பர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி பெயரில்.

அதற்கப்புறம் இருவரும் இணை பிரியாத நண்பர்களாகவே இருந்தார்கள். எல்லாம் தாயக்கட்டை உருள்கிற நேரத்தில் மாறிவிடும் அல்லவா? மாறிவிட்டது. தனது சபதத்தில் ஒன்றாக இருந்து தன் கைக்கு வந்த டப்பிங் தியேட்டர் அதற்கப்புறமும் அஜீத்திடம் இல்லை. பிரிந்து போன சக்கரவர்த்தி அந்த தியேட்டரையும் தன்னோடு வைத்துக் கொண்டார். இப்போது கோடம்பாக்கத்தில் ஒரு செய்தி அடிபட ஆரம்பித்திருக்கிறது. தன்னை விரோதித்துக் கொண்டு சென்ற அதே எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் தற்போதைய நிலைமை அவ்வளவு நல்லபடியாக இல்லை.

தனது முன்னாள் நண்பரை காப்பாற்ற அவருக்கு கால்ஷீட் கொடுக்கும் முடிவிலிருக்கிறாராம் அஜீத். நோ காமென்ட்ஸ்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
த்ரிஷா வருண்மணியன் பிரிவுக்கு காரணம், அந்த ஒரு வார்த்தைதானாம்!

தாலி கட்டி அட்சதை விழுகிற வரைக்கும் கூட நடிகர் நடிகைகள் திருமணங்களில் திடீர் மாற்றம் வரலாம் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் நம்ம த்ரிஷா வருண்மணியன் விவகாரம்தான்!...

Close