அஜீத் காதுக்கு வந்த புகார்! ‘படம் இல்ல போ…’ டைரக்டருக்கு ரிவிட்?
அஜீத்தின் தற்போதைய படத்திற்கே இன்னும் பெயர் வைக்கக் காணோம். அதற்குள் அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகள் தாறுமாறாகி கிடக்கிறது ரசிகர்கள் மத்தியில். சிறுத்தை சிவா படத்திற்கு பிறகு அவர் கடவுளின் பெயர் கொண்ட ஒரு இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதாக செய்திகள். ஏற்கனவே அஜீத்தை வைத்து படம் இயக்கியவர் அவர். கடந்த பல வாரங்களாக வெளியாகி வரும் இந்த செய்தியை சம்பந்தப்பட்ட இயக்குனரும் சரி, அஜீத் தரப்பும் சரி. மறுக்கவும் இல்லை.
இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத வெடிகுண்டு. அஜீத்தின் குட் லிஸ்டிலிருந்து திடீர் நீக்கம் ஆகிவிட்டாராம் அந்த கடவுள் இயக்குனர். பின்னணியில் சொல்லப்படும் தகவல்கள்தான் பரபர! சில வாரங்களுக்கு முன் அஜீத்தை சந்திக்க வந்தாராம் இயக்குனரின் மனைவி. எடுத்த எடுப்பிலேயே ஓவென்று அழுகை. அவரை சமாதானப்படுத்திய அஜீத், ‘என்னம்மா பிரச்சனை?’ என்று கேட்க, ‘என் கணவர் வீட்டுக்கே வருவதில்லை. ஒரு தீப நடிகையுடன் குடித்தனம் செய்து வருகிறார். யாரு சொன்னாலும் கேட்க மாட்டார். நீங்க சொன்னா மட்டும்தான் கேட்பார். அவரை மீட்டுக் கொடுங்க’ என்று கண்ணீர் விட்டு அழ…. ‘சரி. நீங்க போங்க நான் பார்த்துக்குறேன்’ என்று அனுப்பி வைத்தாராம் அஜீத்.
உடனடியாக அவரை தொடர்பு கொண்ட அஜீத், ‘உங்களுக்கு நான் தர்றதா இருந்த கால்ஷீட் கிடையாது. நீங்க திருந்துற வரைக்கும் என் வாசலை கூட மிதிக்காதீங்க’ என்று கூறிவிட்டாராம். இந்த பதிலால் அதிர்ச்சியான இயக்குனர் அஜீத்தை சமாதானப்படுத்த பல வழிகளிலும் முயல்கிறாராம். இந்த விஷயத்தை யார் போட்டுக் கொடுத்தது என்றும் புரியாமல் தவிக்கிறாராம்.
சரி, அந்த கடவுள் இயக்குனருக்கு பதிலாக இப்போது அஜீத்தின் அடுத்தப்பட இயக்குனர் லிஸ்ட்டில் இருப்பது யார்? யார்? கே.வி.ஆனந்தும், ஏ.ஆர்.முருகதாசும் என்கிறார்கள். இருவரில் யாருக்கு முதலிடமோ?