அஜீத் ஷாலினி தம்பதிக்கு இன்னொரு குவா குவா! ஆனந்தம் விளையாடும் வீடு…
சொல்லெல்லாம் இனிப்பு, சுவையெல்லாம் இனிப்பு என்றாகிக் கிடக்கிறது அஜீத் வட்டாரம். அவர்களுக்கு கிடைத்த நல்ல செய்தி அப்படி. அஜீத் மீண்டும் அப்பாவாக போகிறாராம். மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது இந்த தகவல்! காரணம், மீடியாவில் இப்படியெல்லாம் செய்திகள் வருவதை அஜீத் விரும்ப மாட்டார் என்பதால்தான். ஆனால் சில முக்கியமான செய்திகளை எப்படி பாதுகாத்தாலும் வெளிவராமல் தடுக்க முடியாதே? அப்படி கசிந்ததுதான் இந்த தகவல்.
மகள் அனோஷ்கா பிறந்ததிலிருந்து அந்த குழந்தையை தாயுமானவராகவும் பார்த்து பராமரித்து வருகிறார் அஜீத். ஊருக்குதான் பெரிய ஹீரோ. தன் மகளுக்கு? செல்லமான அப்பாவல்லவா? அந்த குழந்தையின் பள்ளிக்கே அவ்வப்போது சென்று மகளை அழைத்து வருகிற அளவுக்கு பாசத்தால் நனைத்துக் கொண்டிருக்கிறார் அஜீத். வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றாலும், மகள் நினைப்பு வந்தால் சொந்த செலவில் டிக்கெட் போட்டு அம்மாவையும் மகளையும் அழைத்துக் கொள்வாராம்.
பள்ளியில் சுட்டிக்குழந்தையாக வலம் வரும் அனோஷ்காவுக்கு விளையாடி மகிழ ஒரு தங்கச்சி பாப்பாவோ தம்பி பாப்பாவோ வரப் போகிறார். எங்கள் வீட்டில் எல்லா நாளும் தீபாவளி என்று அந்த குடும்பம் கொண்டாடி மகிழட்டும். வாழ்த்துவோம்…