அஜீத்-ஷாலினியின் கலர்ஃபுல் முடிவு?!
அஜீத் மீண்டும் அப்பாவாகப்போகிறார் என்கிற தகவலை நாட்டு மக்களுக்கு முதன் முதலில் அறிவித்தது நமது நியூதமிழ்சினிமா.காம் தான். அதே ஸ்பீடில் இன்னொரு கலர்ஃபுல்லான தகவலும் இப்போது உங்கள் பார்வைக்கு!
ஈசிஆர் சாலையில் கடற்கரைக்கு சற்று அருகாமையிலிருக்கும் அஜீத் வீடு அவருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் சுவாரஸ்யமானதுதான். வாசலில் எம்மதமும் சம்மதம் என்பதற்கு அறிகுறியாக வைக்கப்பட்டிருக்கும் அடையாள சின்னத்தில் ஆரம்பித்து, அதிக கூட்டம் கூ(ட்)டாத ஹீரோவின் வீடு என்கிற வகையிலும் சின்ன சின்னதாக ஸ்பெஷல் பார்வைகள் உண்டு அந்த வீட்டிற்கு. அங்குதான் இப்போது அஜீத்தும் இல்லை. ஷாலினியும் இல்லை. அவர்களது அன்பு மகள் அனோஷ்காவும் இல்லை. திருவான்மியூரில் அமைந்திருக்கும் பங்களா ஒன்றில் வாடகைக்கு குடி போயிருக்கிறார்கள். என்ன காரணம்?
வாஸ்தா? அதிர்ஷ்டமா? கிரகக் காரணங்களா? ஒன்றும் இல்லை. வரப்போகும் புது வாரிசுக்கு தன் பங்களாவை இன்னும் அழகாக்கிக் காட்டப் போகிறாராம் அஜீத். வீடு மொத்தமும் இன்டீரியர் டெகரெஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. புத்தம் புது பெயிண்டுகளும் அடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதமாக இப்படி அமர்களப்பட்டுக் கொண்டிருப்பதால், தற்காலிகமாக ஒரு வாடகை பங்களாவுக்கு குடிபோயிருக்கிறார்கள் குடும்பத்தோடு.
கடந்த சில தினங்களாகவே அஜீத்தை காணாமல் தவிக்கும் அவரது தெருவாசிகள், அவர் வருவாரா… அவர் வருவாரா… என்று தினந்தோறும் அந்த வீட்டை நோட்டமிட்டுக் கொண்டே நகர்கிறார்கள்.