அஜீத் ஷுட்டிங் தள்ளிப்போக இதுதான் காரணமாம்!

கோடம்பாக்கத்தில் உலவிய தகவல்களின் படி பார்த்தால் கூட இந்நேரம் பாதி கிணறை தாண்டியிருக்க வேண்டும் சிவாவும் அஜீத்தும். ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு இவ்விருவரும் இணையும் படத்தின் ஷுட்டிங் இப்போது மே தாண்டி, ஜுன் தாண்டி, ஜுலைக்கு போயிருக்கிறது. அதுவும் தாண்டுமா என்பதை இப்போதைக்கு உறுதிபடுத்த முடியாது என்றாலும், அவ்வளவு தயக்கத்திற்கும் காரணம் சென்டிமென்ட்தான் என்கிறது அஜீத்தின் புதுப்பட வட்டாரம்.

மே 1 ந் தேதி அஜீத்தின் பிறந்த நாளில் கோலாகலமாக துவங்கியிருக்க வேண்டிய இந்த படம், இப்போது ஜுலை வரை போனத்திற்கு காரணம், கதை விவகாரத்தில் ஏகப்பட்ட ஆலோசனைகளை சொல்லி வருகிறார் அஜீத் என்பதால்தானாம். வேதாளம் படத்தில் தங்கை சென்ட்டிமென்ட் வச்சாச்சு. கவுதம் மேனன் படத்தில் மகள் சென்ட்டிமென்ட் வச்சாச்சு. இந்த படத்தில் அம்மா சென்ட்டிமென்ட் வச்சுக்கலாமே என்ற சிவாவின் யோசனைக்கு அவ்வளவாக பிடி கொடுக்கவில்லையாம் அஜீத். படத்தில் சென்ட்டிமென்ட் இருக்கணும். ஆனால் இது எதிலும் அடங்காத புது சென்ட்டிமென்ட்டா இருக்கணும் என்று கூறியிருக்கிறாராம் அஜீத்.

கதை விவாதக் குழுவோடு உட்கார்ந்து ஸ்பெஷல் தோசை வார்த்துக் கொண்டிருக்கிறார் சிவா. அது வட்டமா வருமா? வாட்டமா வருமா? ஒரு முடிவு தெரிந்தால்தான் தலைவாழை இலை வெட்டவே அனுமதிப்பார் அஜீத்.

ரசிகர்களே விருந்துக்கு அவசரப்படாதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Director Union Association Felicitated Manithan Team – Stills Gallery

Close