சூர்யா- அஜீத் துவங்கியது நிழல் யுத்தம்!

கவுதம் மேனனை கழற்றிவிட்டாலும் அவரது மூவ்மென்ட் ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டுதானிருக்கிறார் சூர்யா. கவுதமுக்கு அஜீத்தின் கால்ஷீட் கிடைத்தது ஒரு அதிர்ச்சி என்றால், அவர் நடிக்கப் போகும் இந்தக் கதை சூர்யாவுக்கு சொல்லப்பட்ட கதை என்பதும், அதில் சிறு அளவு கூட மாற்றமில்லாமல் நடிக்க அஜீத் ஒப்புக் கொண்டார் என்பதும் சூர்யாவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கதவை யாராவது மூடினால் இன்னொரு கதவை திறக்க வேறொரு செக்யூரிடி தயாராக இருப்பார் என்கிற இறைவனின் விளையாட்டு இப்போது கவுதம் அஜீத்தை வைத்து ஆடப்பட்டு வருவதால், இந்த திருவிளையாடலின் முடிவு வரைக்கும் சஸ்பென்சும், சங்கடமும் தொடரும் போலிருக்கிறது. அதன் விளைவுதான் அந்த போட்டோ! கவுதம் மேனன் சும்மாயில்லாமல் தானும் அஜீத்தும் சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கும் ஒரு படத்தை ட்விட்டரில் வெளியிட பொச பொசவென ஆனது அவருக்கு பிடிக்காதவர்களின் ஏரியா.

‘அவங்க ஷுட்டிங் போறதுக்கு முன்னாடி நம்ம ஒரு புதுப்படத்தை அறிவிக்கணும்’ என்று சூர்யாவை சிலர் உசுப்பேற்றினார்களாம். அதன் விளைவாகதான் அவசரம் அவசரமாக வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு பூஜை போட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

எது எப்படியோ? இரு பெரும் நடிகர்கள் அடித்துக் கொண்டால் நல்ல பொழுதுபோக்கு படங்களுக்கு மட்டுமல்ல, பொழுதுபோக்கு செய்திகளுக்கும் பஞ்சமிருக்காது. புழுதி கௌம்ப ஆடுங்கண்ணே ஆடுங்க….

5 Comments
 1. Anjaan says

  Ajak cant even pluck Suriya’s hair,,,:p

  1. ram iyer says

   ask songham to release movie on same date wid ajith, he wont even remain in field

  2. Jessy says

   Hello,

   read the above news carefully. It says surya doing something. Doesn’t say ajith doing something.

   Surya can’t even touch ajith’s single day opening review, even for next 10-15 years. Surya might be given some hit movies. Ajith doesn’t. But, if surya give’s two more flops, then he will be forgotten. one single hit is enough for Ajith, to keep his opening for next 10 years. Do not loose words.

   He is not like surya to forget people, who helped him. He is true human, who helps even who insulted him. Surya not even a person who can think to compare with ajith.

   1. Arunkumar says

    Awesome statement from jessy

 2. Jessy says

  Moderator…!!!

  how are you allowing these kind of indecent comments here….????????????

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தியேட்டர்களை இடிக்கறது நல்லதுதான்! நாசர் பரபரப்பு பேச்சு

ரஞ்சித்குமார் தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜா.ரகுபதி இயக்கிய ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இப்படக் குழுவினர்...

Close