எந்த கட்சிக்கும் ஓட்டு இல்லை! அஜீத் எடுத்த திடீர் முடிவு?

அரசியல் ஒரு கோவில் என்றால், ஆளுக்கொரு திசையில் திருப்பிக் கொண்டு நிற்கும் நவக்கிரஹங்கள் வேறு யாருமல்ல, கட்சிகள்தான். தேர்தலுக்கு தேர்தல் ஆதாயம் பார்க்கும் கட்சிகளே இப்படியென்றால், நமக்காக பிரச்சாரம் பண்ணுங்க, குரல் கொடுங்க என்று வற்புறுத்தப்படும் சினிமா ஹீரோக்களின் அரசியல் பார்வை எப்படியிருக்கும்? ஆமாம். அப்படிதான் இருக்கிறது பல ஹீரோக்களின் பார்வை.

‘இந்த தேர்தலில் பெரிய தலைங்க எப்படியாவது அடிச்சுக்கிட்டு ஒழியட்டும். 2022 தேர்தலில் பார்த்துக்கலாம்’ என்ற நினைப்பும் சில ஹீரோக்களுக்கு இருக்கிறது. தேர்தலில் ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை என்று நம்புகிற லிஸ்ட்டில் இருக்கிற ரஜினி, கமல், அஜீத், விஜய் எல்லாரும் இந்த தேர்தலை மிக மிக அமைதியாக எதிர்நோக்கப் போகிறார்கள். இதில் அஜீத் பாடுதான் சுத்தம். இந்த தேர்தலில் ஓட்டுப் போடக் கூட அவர் சென்னைக்கு வர மாட்டார் போலிருக்கிறது. எப்படி?

வேதாளம் சிவா இயக்கப் போகும் படத்தின் ஷுட்டிங் அநேகமாக மே1 ந் தேதி அஜீத் பிறந்த நாளில் துவங்கும் போல் தெரிகிறது. கதைப்படி முழு படமும் வெளிநாட்டில்தான் படமாக்கப்படவிருக்கிறதாம். அதனால் ஷுட்டிங்குக்கு கிளம்புகிற அஜீத், படம் முடிந்த பின்புதான் சென்னைக்கே திரும்புவார் என்கிறது அவரது ஷெட்யூல் தகவல்கள்.

நடிகர் சங்க தேர்தலையே ஜஸ்ட் லைக் தட் என்று புறக்கணித்த அஜீத்துக்கு, இந்த பொதுத் தேர்தல் அவ்வளவு முக்கியமாகவா இருக்கப் போகிறது?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அலைக்கற்றை போஸ்டரில் விஜய்! ஆத்திரப்பட்ட எஸ்.ஏ.சி?

தேரை இழுத்து தெருவுல விட்றது என்பது இதுதானோ? கடந்த சில மாதங்களாகவே தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார் விஜய். வேலாயுதம் பட காலத்திலிருந்தே அவரது...

Close