நிதானமா? அலட்சியமா? அஜீத்தை டென்ஷனாக்கும் போனிக்கபூர்?

இன்னும் இருபத்தி சொச்சம் நாட்களே உள்ளது ரிலீசுக்கு. இன்னும் அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வியாபாரத்தை அந்தரத்தில் தொங்க விட்டு அலட்சியம் காத்து வருகிறார் தயாரிப்பாளர் போனிக்கபூர். வெளியூருக்கு போனா குளத்துல இறங்காதே… என்கிற பழமொழி அவருக்கு தெரியாமலிருக்கலாம். ஆனால் குளத்தில் இறங்கி குரல்வளை மூழ்குகிற அளவுக்கு போய்விட்டது அவரது நிலைமை!

படத்தை விலை கேட்டு வந்த எல்லா விநியோகஸ்தர்களும் மூட்டையை கட்டிக் கொண்டு வீடு திரும்பிவிட்டார்கள். இனிமேல் இவர் சொல்கிற விலைக்கு விற்கவே முடியாது என்கிற நிலையில், சொந்தமாக வெளியிட முடியுமா? அப்படி வெளியிட்டால் அவர் அடையப்போகும் அசவுகர்யங்கள் என்னவாக இருக்கும்? என்றெல்லாம் பட்டிமன்றம் வைத்து பதற்றப்பட ஆரம்பித்திருக்கிறது கொம்பு குத்தி குடல் சரிந்த நிலையிலிருக்கும் சக தயாரிப்பாளர்களின் மனசு.

கொடுங்க சார்… வர்ற கலெக்ஷனை கமிஷன் போக கொடுத்துடுறோம் என்று உள்ளே குதிப்பவர்கள் கடைசியில் எதை கொடுப்பார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே? அப்படியிருக்க… போனிக் கபூர் எந்த நம்பிக்கையில் இன்னமும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை விற்காமலிருந்தார்?

இது ஒருபுறமிருக்க… அஜீத்திற்கே போனிக்கபூர் மீது வருத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். விவேகம் படம் வெளியான பின்பு பல விநியோகஸ்தர்கள் அஜீத்திற்கு நெருக்கடி கொடுத்ததும், சுதாரித்துக் கொண்ட அஜீத் “இன்னொரு படத்திற்கு கால்ஷீட் தர்றேன். நீங்களே விநியோகஸ்தர்களை சமாளிங்க. எங்கிட்ட யாரும் வரக் கூடாது” என்று சத்யஜோதி தியாகராஜனிடம் கூறியதும் வரலாறு. அனுபவஸ்தரான அவர் அந்த விஷயத்தை மிக சாதுர்யமாக டீல் செய்தார்.

ஆனால் புரியாத ஊரில் கடை விரித்திருக்கும் போனிக்கபூர் இந்த சக்கர வியூகத்திலிருந்து எப்படி தப்பிக்கப் போகிறாரோ?

பின்குறிப்பு- நிதானத்திற்கும் அலட்சியத்திற்கும் நூல் அளவே டிபரன்ஸ்!

Read previous post:
“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”

https://www.youtube.com/watch?v=OtMJLx-vC30&feature=youtu.be

Close