அஜீத் விஜய்? நடுவில் ஒரு உள் கனெக்ஷன்?

இரண்டு ஹீரோக்களுக்கு இடையே சண்டை வருவது இன்று நேற்றல்ல, தமிழ்சினிமா எப்போது வசனம் பேச ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே இருக்கிறது. பேஸ்புக்ல அடிச்சுக்குற அத்தனை ரசிகர்களும் போன பிறவியில் தியாகராஜ பாகவதருக்காகவும், கிட்டப்பாவுக்காகவும் எதிரெதிர் திசையில் நின்று பேச்சால் அடித்துக் கொண்டவர்கள்தான். அதற்கப்புறம் அது சிவாஜி எம்ஜிஆர் சண்டையாகி, ரஜினி கமல் சண்டையாக தொடர்ந்து இன்று அஜீத் விஜய்யாகி நிற்கிறது. இப்போது வசதியாக பேஸ்புக், ட்விட்டர். வாட்ஸ்ஆப், போன்ற கர்லா கட்டைகளும், கத்தி கபடாக்களும் இவர்களுக்கு சப்போர்ட் பண்ணுவதால், ரத்த களறியாக கிடக்கிறது வலையுலகம்!

ரஜினியும் கமலும் தனிப்பட்ட வாழ்வில் நண்பர்களாக இருந்தாலும் எப்படி ஒரு பகையை ஊதி ஊதி வளர்த்து அதை ஊர் தலைமேல் எறிந்துவிட்டு நிம்மதியானார்களோ, அப்படிதான் அஜீத்தும் விஜய்யும் செய்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அதற்கு உதாரணமாக இருவரது படங்களின் தலைப்பே சாட்சியாக நிற்கிறது.

புலி படத்தில் முழுக்க வரும் வேதாளம் வேதாளம் என்ற வசனங்களும், விஜய்யே ஒரு வேதாளம்தான் என்று கடைசியாக முடிவதும் திட்டமிடாத ஒன்றாக இருந்தாலும், அதை எப்படி அஜீத் படத்தில் வைத்தார்கள் என்ற சந்தேகம் திரையுலகத்தில் பலருக்கும் எழாமல் இல்லை. அதே போல வேதாளம் படத்தில் அஜீத், தெறிக்க விடலாமா? என்று பேசிய வசனத்தை, தியேட்டரே தெறிக்கிற அளவுக்கு கைதட்டி ரசித்தது அவரது ரசிகர் வட்டாரம். இப்போது அந்த தெறிக்க விடலாமாவில் இருந்துதான் தெறி என்ற வார்த்தையை மட்டும் வெட்டி எடுத்திருக்கிறார்கள் விஜய் படத்தின் தலைப்பாக.

இப்படி இவர் படத்தின் மையத்தை அவர் தலைப்பாக்குவதும், அவர் படத்தின் மையத்தை இவர் தலைப்பாக்குவதும் அடுத்தடுத்து நடப்பது ஒன்றும் எதார்த்தமான விஷயமேயல்ல. இருவரது ரசிகர்களும் எப்போதும் ஒரு டென்ஷன் மனநிலையிலேயே இருக்க வேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம். ஒருவேளை இதையெல்லாம் இருவரும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு செய்கிறார்களோ என்கிற சந்தேகம் திரையுலகத்திற்கு இருக்கிறது.

இவ்விரு ஹீரோக்களின் ரசிகர்களும் வெளிப்படையாக பல ஊர்களில் மோதிக்கொண்டு போலீஸ் கேஸ் ஆகும் அளவுக்கு நிலைமை போய் கொண்டிருக்கிறது. பிரபல ஊடகங்கள் அஜீத் விஜய்யிடம், இதை எப்படியாவது தடுங்கள் என்று எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பது தீ வளரட்டும்…. என்பதால் இருக்கலாம்!

அந்த பிரச்சனை ஒருபுறம் இருக்கட்டும். எப்படியோ? தமிழ்நாட்டை தெறிக்க விட்ருச்சு… தெறி படத்தின் பர்ஸ்ட் லுக்!

2 Comments
  1. shakthi.k says

    ne solrathu real,rendu parumay plane pannithan pandraka…
    ithu mattuma jilla ,veeram rendu padathulaium 70% oray nadikargal than act pannaga and oray set veda than use pannirupaga……..

  2. Shakthi says

    சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கமல் நட்புடனேயே தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். அவர்களது ரசிகர்களும் நல்ல நட்புடன் தான் உள்ளனர். ஆனால், இந்த 2 முட்டாள் நடிகர்களும் பேசி வைத்துக் கொண்டு தனது அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Actor Vijay In Theri Movie Firstlook Poster

Close