தன்ஷிகாவை அப்படியெல்லாம் பேசக்கூடாது… ஊழியரை எச்சரித்த அஜீத்?
தன்ஷிகாவின் உடல் வாகிற்கும், பாடி லாங்குவேஜூக்கும் அவர் வில்லியாகிவிட்டார் என்று யாராவது சொன்னால், ‘பொருத்தமா இருக்குமே’ என்று சந்தோஷப்படுகிறவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். அதே பார்வையோடு அஜீத் படத்தில் நடிக்க தன்ஷிகாவை பிடித்து போட்டிருக்கிறார் கவுதம் மேனன். அஜீத்திற்கு வில்லியாக நடிக்கிறார் தன்ஷிகா என்று செய்திகள் லேசாக வெளியே கசிந்த நிலையில் பாய்ந்தடித்துக் கொண்டு அந்த செய்தியை மறுத்திருந்தார் தன்ஷி.
‘நான் தலயோட ரசிகை. படத்தில் நடிக்கும் போது கூட நான் அவருக்கு வில்லியாக நடிக்க மாட்டேன்’ என்று கசிந்துருக, எல்லா பத்திரிகை செய்திகளையும் கவனமாக படித்துக் கொண்டிருக்கும் அஜீத், இந்த செய்தியையும் படித்து சிரித்துக் கொண்டாராம். அவ்வளவுதான்… அவரது குட் புக்கில் தன்ஷிகாவுக்கு இடம் கிடைத்துவிட்டது. அஜீத் மனசில் நமக்கு ஒரு நல்ல இடம் இருக்கு என்பதை எப்போது புரிந்து கொண்டார் தன்ஷி?
படப்பிடிப்பில் இவரை ஒரு தொழிலாளர் லேசாக கிண்டல் அடித்தாராம். என்னவென்று? ‘அந்த பொண்ணுக்கு சரியான ஆம்பிளை குரலுப்பா’ என்று. அந்த பக்கமாக கிராஸ் ஆன அஜீத் இதை கேட்டதும், சட்டென அவரை அழைத்து, ‘யாரையும் இப்படி மனம் கோணுவது போல பேசக்கூடாது. சரியா….?’ என்று கண்டித்துவிட்டு அகல, தொழிலாளர் வளைந்து நெளிந்து குழைந்து கும்பிட்டாராம். வேறு ஹீரோவாக இருந்தால், ‘வந்துட்டானுக’ என்று உதட்டளவில் முணுமுணுத்திருப்பார். ஆனால் அட்வைஸ் செய்தவர் எல்லாருக்கும் பிடித்த அஜீத்தாச்சே?
நிகர லாபம் என்ன? தன்ஷிகாவுக்கு இந்த செய்தியை கேள்விப்பட்ட நாளிலிருந்தே ஜலதோஷமாம்….