‘ஆயிரம் தோட்டாக்கள்! ’ அஜீத் மனசில் எரிந்ததா பல்ப்?

பெத்த புள்ளைக்கு கூட ஒரு பெயர் வைக்க இவ்வளவு யோசிக்க மாட்டாங்க போலிருக்கு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே மாஸ் கிளப்ப போகும் ஒரு படத்திற்கு பெயர் வைக்க இவ்வளவா யோசிக்கணும்? சமீபத்தில் வருகிற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பெயர் வைக்கிற விவகாரத்தில் இப்படியெல்லாம் ரசிகர்களை புலம்ப வைப்பது சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் வாடிக்கை! அஜீத் இன்னும் ஒரு ஸ்டெப் மேலே. என் புகழ் பாடுற மாதிரி தலைப்பு வேண்டாம். படத்தில் வரும் கேரக்டரின் பெயரையே தலைப்பாக வைக்கிற ஓல்டு ட்ரென்டும் வேண்டாம். அது வேண்டாம்… இது வேண்டாம் என்று ஏகப்பட்ட ‘…டாம்’கள்!

தல 55 என்று அஜீத் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் புதுப்படத்தின் தலைப்பு வைப்பதிலும் அநியாயத்துக்கு சிக்கல். கவுதமுக்கு பிடித்தால் அஜீத் நோ என்கிறார். அஜீத்திற்கு பிடித்தால், கவுதம் இன்னும் கொஞ்சம் யோசிப்போமோ என்கிறார். இப்படியே போன தலைப்பு சம்பந்தமான இழுபறி ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.

ஆயிரம் தோட்டாக்கள் என்றொரு தலைப்பை சொன்னாராம் கவுதம். அஜீத் மனசில் பச்சை பல்பு எரிந்ததாக சொல்கிறார்கள். அது ரெட் கலருக்கு மாறுவதற்குள் ஒரே அமுக்!

அறிவிச்சுருங்களேன் கவுதம் சார்….!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘அரண்மனை ’ விவகாரம்… குஷ்புவின் கோபத்தில் நியாயம் உண்டா?

அரசியல்தான் அப்படி என்றால் சினிமாவும் இப்படியா? குஷ்புவின் ட்விட் ஒன்று தயாரிப்பாளரை குறி வைத்து ‘டமால்’ ஏற்படுத்தியதால் இப்போது கோலிவுட்டிலும் பரபரப்பு. சுந்தர்சி யின் நாலெட்ஜ் இல்லாமலேயே...

Close