காதலியை தேடி ஊர் ஊராக திரியும் அஜ்மல்

D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் D.வெங்கடேஷ் தயாரிக்கும் படம் “ மெல்ல திறந்தது மனசு தெலுங்கில் “ மெல்லக தட்டின்டி மனசு தலுப்புலு “ என்ற பெயரில் வெளியான படமே தமிழில் “ மெல்ல திறந்தது மனசு “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது இந்த படத்தில் அஜ்மல் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக நிக்கிதா நடிக்கிறார்.மற்றும் சத்யா, தனுஜா, பரிமளா, நந்தனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, இயக்கம் – வம்சி தயாரிப்பு – D.வெங்கடேஷ்

படம் பற்றி இயக்குனர் வம்சியிடம் கேட்டோம்….

சிறு வயதில் தனக்கு மனைவியாக வரபோவது இவள்தான் என்று ஒரு பெண்ணை பெரியோர்கள் சொல்லிவிடுகிறார்கள். அஜ்மல் வளர்ந்து பெரியாளாக வந்த பிறகு அஜ்மல் வேறு இடத்திலும் அந்த பெண் வேறு இடத்திலும் வளர்கிறார்கள். அவள் எங்கு இருக்கிறாள் என்று அஜ்மலுக்கும் தெரியாது. தனக்கு மனைவியாக வரவேண்டிய அந்த சிறு வயதில் சொல்லிய பெண்ணை தேடி ஊர் ஊராக சென்று தேடுகிறார் அஜ்மல். அந்த பெண்ணை தேடி கண்டு பிடித்தாரா இல்லையா என்பது படத்தின் கிளைமாக்ஸ். முழுக்க முழுக்க காதல் மட்டுமே இருக்கும் இந்த “ மெல்ல திறந்தது மனசு “ படத்தில்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெயரை மாற்றிய பி.வாசு மகன்! ஜெயிக்குமா சென்ட்டிமென்ட்?

போலீஸ்  பற்றி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன.  போலீஸ் கதை என்றாலே சில பொதுவான சூத்திரங்கள் இருக்கும். போலீஸ் கதாநாயக பிம்பத்துடன் இருப்பார். ஒரு வில்லன் இருப்பான். அல்லது...

Close