காதலிக்கிற பசங்க முட்டாப் பயலுகளாம்! சிக்கலுக்கு ஆளாவாரா சீனி?

படத்தில் நடிக்கும் போது சீனிவாசனை பார்த்து சிரிக்கிறோமோ இல்லையோ? எங்காவது மேடைகளுக்கு வந்தால், மனுஷன் கதற கதற சிரிக்க விடுகிறார். (இதை படத்துலேயும் அப்ளை பண்ணுங்க பாஸ்) இன்று அவர் முக்கிய வேடத்தில் நடித்த ‘பாண்டியும் சகாக்களும்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ட்ரெய்லரில்தான் லவ்வுக்கு எதிராக கொக்கரித்தார் பவர் சீனி.

“அல்வா, சுரிதார், சைட் ஊசி, ரிப்பன்னு விதவிதமா வாங்கிக் கொடுத்து அட்டு மாதிரி இருக்கிற பொண்ணுங்களை லட்டு மாதிரி அழகு படுத்துறீங்களே… அதெல்லாம் எதுக்கு? அவ உங்களுக்கு டாடா காட்டிட்டு இன்னொருத்தன் கூட போறதுக்குதான்… லவ்வுன்னா என்னான்னு புரிஞ்சுக்குங்கடா முட்டாளுகளா…” என்று பவர் ஸ்டார் சீனிவாசன் அட்வைஸ் பண்ணுவது போல வந்தது அந்த காட்சி.

நாட்ல பாதி பேர் இதே வேலையாக திரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பவரின் அட்வைஸ் வாலிபர்களை எச்சரிக்குமா, அல்லது எரிச்சல் பட வைக்குமா? இந்த கவலையெல்லாம் எதிலும் தடையிடாமல் மைக்கை பிடித்தார் பவர். “என்னை பல படங்களில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொல்லி கூப்பிடுறாங்க. நான் என்ன சிலுக்கா?” என்று கேட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.

அறிமுக இயக்குனர் அப்பு கே சாமி இயக்கியிருக்கும் ‘பாண்டியும் சகாக்களும்’ படம் மேஜிக் ரியலிசம் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். புதுமுகம் ஜீன் இசையமைத்திருக்கிறார்.

To Listen Audio Click Below:-

https://youtu.be/2ctR0jPlHng

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக துள்ளும் இயக்குனர்

‘ஜல்லிக்கட்டை அழிக்க நினைப்பவர்களுக்கே அவ்வளவு வன்மம் இருந்தால், அதை காக்க துடிக்கும் நமக்கு எவ்வளவு இருக்கும்’ என்று இளமி திரைப்படத்தின் இயக்குனர் ஜூலியன் பிரகாஷ் பேசினார்.

Close