மீண்டும் ஏன் நடிக்க வந்தேன்? எய்டீஸ் ஹீரோயின் அமலாவின் பியூட்டி பதில்!

மெல்ல திறந்திருக்கிறது கதவு…. வெகு காலமாகவே இந்த கதவின் சாவியையும் கைகளிலேயே வைத்திருந்த அமலா நாகார்ஜுனா, இப்போது சிறகை விரித்து வெளியே வந்திருக்கிறார். இந்த முறை அவர் வந்திருப்பதும் நடிக்கதான். ஆனால் சினிமாவில் அல்ல. சீரியலில்! உயிர்மெய் என்ற தொடரில் மருத்துவராக நடிக்கிறாராம். இதற்காக சென்னை வந்திருந்த அமலா, அப்படியே பிரஸ்சையும் சந்திக்க பிரியப்பட்டார். சென்னை இப்போது அரக்கோணம் வரை நீண்டிருந்தாலும், அம்பத்துரில் புதிதாக போடப்பட்டிருக்கும் மருத்துவமனை செட்டில் சந்திப்பு என்பதால் அநேக நிருபர்களுக்கு அலுப்பு வந்தது. இருந்தாலும், அமலாவே ஒரு அஞ்சால் அலுப்பு மருந்துதானே?

பொசுக்கென்று பிரஷ் ஆகிக் கொண்டு அம்பத்துருக்கு படையெடுத்தது நிருபர் கூட்டம். எபவ் நாற்பதுகளுக்கு அமலாவின் கண்களை பார்த்தலே நரம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்ளும். அதுவும், ‘மெல்ல திறந்தது கதவு’ படத்தில் அவர் மெல்ல மெல்ல புதைக்குழிக்குள் இறங்கும்போது, ‘என்னை எப்படியாவது காப்பாத்திடேன்…’ என்று கெஞ்சுகிற அந்த கண்களை யாரால் மறக்க முடியும்? ஆனால், யூத்துகளுக்கும் பிடித்த நடிகையாக அவர் மாறியது எப்போது? பிராணிகள் மீதும் அன்பு செலுத்தினாரல்லவா? அப்போதிலிருந்துதான். நாய் நரி பூனை ஓணாணுக்கெல்லாம் கவலைப்படுகிற மனசு அவருக்கு.

இதையெல்லாம் விட்டுட்டு எப்படிங்க சீரியலில்?

இந்த கேள்வியை அவரிடம் கேட்டபோது, ‘சீரியலில் நடிக்கும் போதுதான் நிறைய ஓய்வு கிடைக்கும். நாள் கணக்கில் விடுமுறையும் கிடைக்கும். அதனால் சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிக்க விரும்பினேன். அது மட்டுமல்ல, உயிர்மெய் சீரியலில் நான் டாக்டராக நடிக்கிறேன். சமூக பொறுப்புள்ள கேரக்டர் அல்லவா? அதனாலும்தான்’ என்றார். ‘அந்த கால சினிமாவுக்கும் இந்த கால சினிமாவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. தொழில் நுட்பம் நிறைய வளந்திருக்கு. ரசிகர்களின் ரசனை கூட மாறியிருக்கு’ என்கிற அமலாவின் கருத்துக்கு மறு கருத்து ஏது?

இந்த நெடுந்தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஓங்கி அடிச்சா ஐம்பது டன் வெயிட்றா… மீண்டும் காக்கி சட்டை மாட்டுகிறார் விஜய்?

விஜய்யின் அகலமான தோள்களும், ஆளை துளைக்கும் கண்களும் போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு பொருத்தமோ பொருத்தம். இருந்தாலும், ‘சிங்கம் தனியாகவே உலவட்டும்...’ என்று சூர்யா வழியில் க்ராஸ் செய்யாமலே...

Close