இதென்ன பாலிடிக்ஸ்? சவுந்தர்யா படத்திலும் அமலாபால்!

டைவர்சுக்கு பின் அமலாபால், தண்ணி ஊற்றிய ஆவின் பால் போல நீர்த்துப் போவார் என்று எதிர்பார்த்தால்…? அங்குதான் ஷாக்! அரைகுறை ஆடையுடன் போட்டோ எடுத்து, அதை கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் உலவ விட்டுவிட்டார். நான் இன்னும் அப்படியே இருக்கேன் என்று சொல்லாமல் சொல்லும் அப்படங்கள், பல ஹீரோக்களை கொல்லாமல் கொல்கிறதாம் இப்போது. ஒரு கேரக்டர் பார்சேல்… என்று சந்தோஷமாக பொட்டலம் கட்டுகிறார்கள் அமலாபாலை.

தமிழில் சில முக்கிய படங்களிலும் அவர் தொடந்து புக் ஆகி வருகிறார். இந்த நிலையில்தான் சவுந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கப் போகும் படம் ஒன்று உருவாகி வருகிறதல்லவா? அதில் அமலாபால் இருப்பாரா என்கிற சந்தேகம் வந்திருக்கிறது கோடம்பாக்கத்திற்கு. இந்த சந்தேகம் ஏன் வரணும்?

ஏன்னா… இந்தப்படம் வேலையில்லா பட்டதாரி படத்தின் பார்ட் 2 என்கிறார்கள். பார்ட் ஒன்னில் நடித்த அத்தனை பேரும் இதிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிறாராம் தனுஷ். முதலில் இப்படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றுதான் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தாறுமாறாக ஓடி கோடிகோடியாக குவித்த ஒரு படத்தின் செகன்ட் பார்ட் என்றால், இன்னும் எதிர்பார்ப்பு எகிறுமே? இந்த யோசனைக்கு யெஸ் சொல்லிவிட்டார் தனுஷ்.

பார்ட் 1 ல் நடித்த அத்தனை பேரும் ஏதோவொரு காட்சியில் தோன்றுவார்கள் என்பது மட்டும் இப்போதைக்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதன்படி அமலாபாலும் வருவார். ஆனால் அவரது கேரக்டரை நீடிப்பதா, குறைப்பதா என்பதை தனுஷ்தான் முடிவு செய்வார்.

அப்படின்னா…? இருப்பார்ங்கிறீங்க… இருக்கட்டும் இருக்கட்டும்…

To listen Audio Click Below:-

https://youtu.be/6rjKH62r4pE

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அஜீத் விஜய் விரிசல்! நடுவில் நுழைந்த ஷாம்லி?

தன்னை அஜீத் விஜய் ரசிகர்களாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் காட்டுகிறார்கள் இளம் ஹீரோக்கள். இவ்ளோ பெரிய மனசா இவங்களுக்கு? என்று மாரை பிளந்து பார்க்க அவசியமில்லாமல்...

Close