‘கூவுறதுல நம்பள மிஞ்சுருவாரு போலிருக்கே’ ரஜினி மன்ற தலைவர்களையே மிரள வைத்த அமீர்?

லிங்கா பாடல் வெளியீட்டு விழா சத்யம் வளாகத்தில் நடைபெற்றது. இந்திய திரையுலகமே ஒன்று சேர்ந்து இத்தனை வருடங்களாக தராத அவமானங்களையெல்லாம் தாண்டி உள்ளே சென்ற பத்திரிகையாளர்களுக்கு அவரவர் பலத்திற்கு ஏற்ப பல்வேறு கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. சிலருக்கு பகவானின் (ரஜினிதான், வேறு யார்?) நேரடி தரிசனம். சில பத்திரிகையாளர்களுக்கு வெறும் ஸ்கிரீன் தரிசனம்தான். இசை வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கத்தில் நடக்க, இன்னொரு மினி தியேட்டரில் இருந்த இந்த ‘கட்டப்புள்ள’ பத்திரிகையாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அதன் வீடியோ பதிவு மட்டும் திரையிடப்பட்டது.

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் ஜெயலலிதாவை கோர்ட் முடக்கிவிட்டதால், ஆளாளுக்கு பெரிய பெரிய ஜால்ராக்களோடு ரஜினியை அரசியலுக்கு இழுத்தார்கள். அதுவும் டைரக்டர்கள் அமீர் மற்றும் சேரனின் அழைப்பு கண்டு, மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவரே ‘கூவுறதுல நம்பள மிஞ்சுருவாரு போலிருக்கே’ என்று கேவி கேவி அழுததாக சத்யம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி என்னதான் பேசினார் அமீர்? அதை தெரிந்து கொள்வதற்கு முன் அமீரின் முந்தைய பதிவுகளை லேசாக புரட்டினால், ரஜினியே அலர்ட் ஆகிவிடுவார். சன் டி.வி யின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சக்சேனா கலந்து கொண்ட ஒரு விழாவில் அமீரும் கலந்து கொண்டார். அப்போது சக்சேனா நினைத்தால் குதிரையை யானையாக்குகிற இடத்திலும் யானையை பூனையாக்குகிற இடத்திலும் இருந்தார். அவரை கவிழ்க்க அந்த மேடையில் நடந்த போட்டியில் முதலிடத்தை பெற்றவர் அமீர்தான். சாக்ஸ் சார் கால்ஷீட் கொடுத்தா போதும். நான் சூப்பரா ஒரு படத்தை எடுத்துருவேன். அவ்வளவு அழகா இருக்கார் என்றார் அந்த மேடையில். அதற்கப்புறம் சாக்ஸ் நிலைமை சரிந்தது. இப்போது அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. இந்த நிலையில் இன்னொரு பிரச்சனை வந்தது. பிரபல நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ வாக பணியாற்றிய ஒருவர் ஏதோ ஒரு கருத்தை கூறப்போக பெரும் சர்ச்சை. அப்போது ஒரு மேடையில் பேசிய அமீர், தமிழ்சினிமாவையே கெடுத்தது ரெண்டு சி.இ.ஓக்கள்தான் என்றார்.

இப்போதும் கூட, போயஸ் கார்டனிலிருந்து ஒரு இருமல் சப்தம் கேட்டால் போதும்…. ‘அம்மா ச்சும்மா மேடையில சத்தமா பேசி பழகி பார்த்தணுங்கம்மா’ என்று ஜகா வாங்கிவிடுவார் அமீர். இருந்தாலும் அவரது பேச்சை பதிவு செய்வது நம் கடமையாச்சே? வாசகர்களே, இதை ஒரு முறை படித்து விட்டு ரூம் போட்டாவது சிரிச்சுருங்க!

ரஜினி சார்.. இங்கே பேசின எல்லாரும் பூடகமா ஒரு விஷயத்தைச் சொல்லிட்டுப் போனாங்க. நம்ம சேரன், விஜயகுமார் எல்லாம் சொன்னாங்க. அது வேற ஒண்ணுமில்ல.. நீங்க தமிழ்நாட்டோட சிஎம் ஆகணும்.. இதுதான் எல்லோருடைய ஆசையும். சார், இந்த நம்பிக்கை பொய்யாக இருக்குமா? இங்கே நீங்கள் பார்க்கிற சில ஆயிரம் பேர் மட்டும் இப்படி கேட்கவில்லை.. வெளியில், இந்த தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பேரும் இப்படித்தான் சார் ஆசைப்படுகிறார்கள். முப்பது ஆண்டுகளாக உங்க மேல மட்டும்தான் தமிழக மக்கள் இப்படியொரு நம்பிக்கையை வச்சிருக்காங்க. இப்பக்கூட இந்த ட்ரைலர்ல இந்த நாட்டு மக்களுக்கு நான் எதாவது செய்யணும்-னு சொல்றீங்க. அதையேதான் நானும் சொல்றேன். அதுக்கான காலமும் கனிந்து வந்திருப்பதாக கடவுள் மேலருந்து சொல்றார். நீங்க அரசியலுக்கு வரணும்னு இந்த நாடே ஆசைப்படுது. அரசியலுக்கு வரணும்ங்கிற ஆசையுடன் நீங்க ஒரே ஒரு மேடை ஏறினா போதும்… இந்த மொத்த நாடும் உங்க பின்னால் வரும்.

ஆயிரம் பேர் ஆயிரம் விதமா பேசலாம். நீங்க பார்க்காத விமர்சனமா? அரசியல்னு வரும்போது வேற ஒண்ணு வரும். அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு, இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க ஏதாவது நல்லது செய்யணும்னு நினைச்சிங்கன்னா, களத்துல இறங்கி நடங்க.. நாங்க எல்லாரும் அப்படியே உங்க பின்னாடி வந்திடறோம். இந்த விஷயத்தைத்தான் இங்க நேரடியா உங்ககிட்ட சொல்ல பலர் தயங்கறாங்க. ஏன்னா எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விஷயத்தை உங்ககிட்ட மட்டும்தான் கேட்க முடியும், வேற யார்கிட்ட சார் கேட்க முடியும்?

என் வாழ்நாள்ல தலைவர்னு யார் பெயரையும் உச்சரித்ததில்லை. இன்னிக்கு முதல் முறையா சொல்றேன், அரசியலுக்கு வரத் தகுதியான இடத்தில் உள்ள, இந்த மக்களை வழிநடத்தக் கூடிய ஒரே தலைவர் நீங்கதான்!

திரண்டிருந்த ரசிகர்கள் அமீரின் பேச்சை வெகுவாக ரசித்தார்கள் என்பதைவிட, அமீரை தங்கள் தேவ துதனாகவே நினைத்தார்கள் என்பதுதான் நிஜம். காலம் இன்னும் எத்தனை ஜால்ராக்களை நன்றாக இருக்கும் ரஜினிக்கு கெடுதி செய்ய அனுப்பி வைக்குமோ?

3 Comments
  1. anath says

    ameer ippadithaan thalaivarnu appa seemana sonnaru ippa rajiniavaa… pichaikaarankooda unmaiya sollithaan pichai KEKURRAR aana neenka

  2. Giridharan says

    Thalaivar Rajini will become the next Chief Minister of Tamil Nadu.

  3. Kannan says

    சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தனியாக கட்சி துவங்க வேண்டும். 2016 தேர்தலில் போட்டி இட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும். அப்போது தான் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘வாடா… கூலிங்கிளாஸ். வந்து பதில் சொல்லு’ மிஷ்கினின் மானத்தை வாங்கிய பாலா!

‘வித்தை கர்வம்’ என்பார்கள் சிலரது பேச்சை கேட்பவர்கள். நேற்று பாலா பேசியது வித்தை கர்வத்தினாலா? அல்லது விதண்டாவாதத்தினாலா? என்பதை நடுவர் மன்ற குழுவை வைத்துதான் முடிவு செய்ய...

Close