அம்……………ம்மா காப்பாத்துங்க! முதல்வருக்கு விக்ரமன் வேண்டுகோள்

சில தினங்களுக்கு முன் ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடந்த திலகர் பட விழாவுக்கு வந்திருந்தார் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன். ‘இங்கு எல்லா பிரஸ்சும் இருக்கீங்க. இந்த நேரத்துல இந்த விஷயத்தை சொல்றதுதான் சரியா இருக்கும்’ என்று பேச ஆரம்பித்தார். அது வேறொன்றுமில்லை, ‘அம்மாவுக்கு வேண்டுகோள்’

தமிழகம் முழுக்கவே அம்மா திட்டங்கள் ஆறாக பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது. அவரது ‘அம்மா உணவகம்’ ஒன்றுதான் இன்றைய உதவி இயக்குனர்களுக்கு ஆபத்பாந்தவனாகவும் இருக்கிறது. எப்பவாவது சம்பளம் கொடுக்கிற இயக்குனர்களிடம் வேலை பார்க்கும் இந்த உதவி இயக்குனர்கள் அன்றாடம் சிக்கன விலையில் சாப்பிட்டு மகிழ்வது அம்மா உணவகத்தில்தான் என்கிறது கோடம்பாக்க புள்ளிவிபரம். ஆனால் இது பற்றியெல்லாம் பேசவில்லை விக்ரமன். மாறாக முதல்வர் பல மாதங்களுக்கு முன் அறிவித்த ஒரு திட்டம் குறித்து பேசினார்.

‘முதல்வரிடம் நாங்கள் ஒரு கோரிக்கை வைத்தோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதற்கு படப்பிடிப்பு தளங்களே இல்லை. அப்படியிருந்த ஒன்றிரண்டு தளங்களையும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்து செட் போட்டுக் கொள்கிறார்கள். அதனால் எங்களுக்கு எங்காவது இரண்டு ஏ.சி புளோர்கள் கட்டி தரும்படி கேட்டிருந்தோம். அம்மாவும் மனமுவந்து பிலிம்சிட்டியில் நாங்கள் கேட்ட ஏசி புளோர்களை கட்டி கொடுத்திருக்கிறார்கள். இன்று சின்ன படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைப்பதேயில்லை. ஏராளமான படங்கள் வெளியாகாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் முன்பு அறிவித்திருந்த அம்மா திரையரங்குகளை தமிழகம் முழுக்க திறந்தால், சினிமா பிழைக்கும். அம்மா அவர்கள் தயவுகூர்ந்து அந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தரவேண்டும்’ என்றார்.

விக்ரமனின் குரல் முதல்வரின் காதில் விழுந்தால், தமிழ்சினிமாவுக்கு விடிவு காலம்தான். நடக்குமா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சீக்கிரமா கிசுகிசுவில் அடிபட வாழ்த்துகிறேன்… அறிமுக ஹீரோவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

நாளொரு ஆடியோ, பொழுதொரு ரிலீஸ் என்று கோடம்பாக்கத்தில் விழாக்களுக்கு பஞ்சமேயிருக்காது. ஆனால் எப்போதாவதுதான் இதுபோன்ற விழாக்களுக்கு ஒரு அர்த்தம் தருகிற மாதிரி, கேட்பதற்கு இனிமையான பாடல்கள் அடங்கிய...

Close