அமரகாவியம், பின்னே இன்று நேற்று நாளை…! ஒரு எய்மும் இல்லாத மியா ஜார்ஜ்

‘அமரகாவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் மியா ஜார்ஜ். அப்படம் வெளிவந்த பின்பு ‘ஒனக்கு எனக்கு’ என்று ஒரு பெரும் கூட்டமே மியாவை ரவுண்டு கட்ட, ‘பொறுமை ப்ளீஸ். ‘நான் ஒண்ணும் அவசரப்பட்டு படங்களை கமிட் பண்ணுற பொண்ணு இல்லை’ என்று கூறிவிட்டு, சைலண்ட்டாக தமிழ்படங்களை நோக்க ஆரம்பித்துவிட்டார். பல மாச இடைவெளிக்கு பிறகு, ‘நம்ம கதை நல்லாயிருந்தா நடிங்க’ என்று மியாவை அப்ரோச் செய்தார் ரவிகுமார் என்ற அறிமுக இயக்குனர். அதுதான் ‘இன்று நேற்று நாளை’ என்ற படம். பீட்சா, சூதுகவ்வும் போன்ற வெற்றிப்படங்களை தந்த சி.வி குமார்தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

விஷ்ணு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் மியாவுக்கு வெயிட்டான ரோலாம். ‘பொதுவாகவே எனக்கு ஒரு எய்மும் இல்ல. நான் அவரோட நடிக்கணும். இவரோட நடிக்கணும்னு நினைச்சு போராடிகிட்டு இருக்க மாட்டேன். இன்னும் பத்து வருஷம் கழிச்சு கேட்டாலும், மியாஜார்ஜ் நடிச்ச படமா? நல்லாதான் இருக்கும்னு மக்கள் சொல்ற மாதிரி படங்கள்ல நடிக்கணும். அவ்வளவுதான் நம்ம நோக்கம். இப்ப இந்த படம் அப்படிப்பட்ட படமா இருக்கும்னு தோணுச்சு. நடிக்கிறேன்’ என்றார். ‘இனிமேதான் தமிழ் கத்துக்கணும்’ என்று அவர் சொன்னாலும், அவர் பேசிய தமிழில் தேன் மிக்சிங், தித்திப்பும் மிக்சிங்…

டைரக்டர் ரவிகுமார் என்ன சொல்றாரு? ‘இன்று ஆரம்பிக்கிற கதை நேற்று பிளாஷ்பேக்கிலும், நாளை பியூச்சரில் நடிக்கப் போவதாகவும் போகும். கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணியிருக்கேன். இந்த கதையை ஹீரோ விஷ்ணுவிடம் சொன்னபோதும் சரி, தயாரிப்பாளர் சி.விகுமாரிடம் சொன்னப்பவும் சரி, இப்ப சொன்ன மாதிரியே குழப்பம் இல்லாமல் ஜனங்களுக்கு புரியற மாதிரி சொல்லிடுவீங்களான்னுதான் கேட்டாங்க. அந்தளவுக்கு இந்த படத்தில் ட்விஸ்ட் இருக்கு’ என்றார்.

ஜீவா போன்ற சிறப்பான படங்களில் நடித்து வரும் விஷ்ணுவிஷால், ‘முண்டாசுப்பட்டி படத்திற்கு பிறகு மீண்டும் காமெடி ரோலில் நான் நடிச்சுருக்கும் படம்னா அது இதுதான். ஹீரோ கையில கிடைக்கிற ஒரு பொருள் அவனை என்னவா ஆக்குது என்பதுதான் கதை. இப்போதைக்கு இதுக்கு மேல கேட்காதீங்க என்றார்.

ஒரு முக்கிய குறிப்பு- இன்னும் நான்கு நாட்களில் மியா ஜார்ஜ் நடித்த மலையாள படம் ஒன்று அங்கு ரிலீஸ் ஆகிறதாம். ‘ஆனா நான் போறதா இல்ல. இங்குதான் சென்னையில் இருக்கும். ஏன்னா… நடிச்சு முடிச்ச படத்தைவிட நடிச்சிகிட்டு இருக்குற படம்தானே முக்கியம்’ என்றார். பொண்ணு படப்பிடிப்பில் குடைச்சல் தராத நல்ல பட்சியா இருக்கும் போலிருக்கு. ஒரே அமுக்கா அமுக்குங்க தயாரிப்பாளர்ஸ்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேசாம இருக்கியா பிந்து! ஃபயர் சேதுபதியான விஜய் சேதுபதி

கொள்ளிக்கட்டைய எடுத்து முதுகு சொறிஞ்சாலும் சொறிஞ்சுப்பேன், ‘வசந்தகுமாரன் ’படத்தில் நடிக்க முடியாது. அதுவும் ஸ்டூடியோ நைன் தயாரிச்சா அவ்ளோதான்’ என்று பின் வாங்கிவிட்டார் விஜய் சேதுபதி. இந்த...

Close