தயாரிப்பது அஜீத் படம்! உதவியது விஜய் படத்திற்கு!
ஊர் கூடி தேர் இழுக்காமல் ஒரு இஞ்ச் கூட நகர்வதில்லை சில விஷயங்கள். என்னதான் விஜய் என்ற மாபெரும் இறக்கை இருந்தாலும், திடீரென தேங்கி நின்றது புலி. அது எதனால்? என்பதையெல்லாம் ஒரு வார்த்தையை தாண்டி பெரிசாக விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை. ரெய்ட்!
விடிந்தால் புலி திரைக்கு வந்தாகணும். ஆனால் இரவு பத்து மணியை தாண்டியும் சம்பந்தப்பட்டவர்களிடம் என்கொயரி நடந்து கொண்டிருக்க, லேபுக்கு ஓடிவந்து பொறுப்பேற்றுக் கொண்டவர் டி.ராஜேந்தர் என்றால் அவருக்கு பக்க பலமாக நின்றிருக்கிறார் அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய மூன்று படங்களின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.
பைனான்சியர்களோடு பேசுவது. வட்டியை குறைப்பது. விநியோகஸ்தர்களிடம் தொகையை வசூலிப்பது என்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாராம். தமிழ்சினிமாவின் இரு கண்கள் என்று கொண்டாடப்படும் அஜீத் மற்றும் விஜய்யை வைத்து படம் தயாரித்தவர் என்ற ஒரே காரணம் மட்டுமல்ல. அதையும் தாண்டிய நல்ல மனசுக்காரர் என்பதால்தான் இது நடந்தது என்றும் கூறுகிறார்கள் இங்கே.
இதன் மூலம் அறியப்படுவது யாதெனில்? விஜய்க்கு உதவினால் அஜீத் கோபிக்க மாட்டார் என்பது மட்டும்தான். புரியுதா ரசிகர்களே…?