அரை பாவாடை ஆன்ட்ரியா -பரபரப்பான கேமிராக்கள்!

திருவாரூர் தேரை நகர்த்துவதுதான் சிரமம் என்பார்கள். இப்போதெல்லாம் அவரவர் படங்களின் ஹீரோக்களை அப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதுதான் சிரமம் போலிருக்கிறது. அத்தகைய சிரமத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரின் பத்திரிகையாளர் சந்திப்பாக இருந்தது வலியவன். படத்தின் ஹீரோ ஜெய் ஆப்சென்ட்! ஏன் சார் அவரு வரலே? என்றார்கள் நிருபர்கள். ‘வந்தவங்களிடம் கேள்வி கேட்கறதை விட்டுட்டு வராதவங்களை பற்றி கேட்கிறீங்களே சார்…’ என்று படபடப்பான சரவணன், இதற்கு முன்பு தமிழ்சினிமாவில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர். ஒன்று ‘எங்கேயும் எப்போதும்’. இன்னொன்று ‘இவன் வேற மாதிரி’.

அப்படியாப்பட்ட இயக்குனருக்கே இப்படியாப்பட்ட இம்சை? போகட்டும்… இந்த படத்தின் டீஸர் ஒன்றை திரையிட்டார்கள். ஒரு ஆக்ஷன் படத்திற்குரிய அத்தனை கர்புர் கர்ஜனைகளும் இருந்தன படத்தில். அந்த ஆன்ட்ரியா போர்ஷன் மட்டும், ‘எங்கேயும் எப்போதும்’ அஞ்சலியை நினைவுபடுத்தியது. ஆன்ட்ரியா எகிற எகிற ஜெய் பம்முகிற ஒரு காட்சி இருக்கிறது டீஸரில்.

நல்லவேளை படத்தின் ஹீரோயினான ஆன்ட்ரியா வந்திருந்தார் அங்கு. அதுவும் ஒரு குட்டை பாவாடை அணிந்து கொண்டு. அதை முழங்காலுக்கு கீழே இழுத்து இழுத்து இழுத்து… விட்டுக்கொண்டு அவர் அமர, மொத்த கேமிரா லென்சும், அவரது ஸ்கர்ட்டுக்கு சமீபத்தில் குறிபார்த்தன. (ஜெய் வரலேன்னா என்ன? இதுபோதும் ஆன்ட்ரி)

படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் வரவில்லை. ஒரு சின்ன கம்யூனிக்கேஷன் கேப் என்றார் டைரக்டர் சரவணன். இருந்தாலும் இந்த படத்தில் வரும் பாடல்களை எழுதிய நா.முத்துக்குமாரும், விவேகாவும் வந்திருந்து இமான் வராத குறையை போக்கினார்கள். முக்கியமான விஷயம்… தான் நடிக்காத படங்களில் கூட பாடி வரும் வழக்கமுள்ள ஆன்ட்ரியா இந்த படத்தில் பாடவில்லை. அட சோகமே!

லட்சுமிமேனன், ரம்யா நம்பீசன் என்று புதுப்புது அவுட் லுக் பாடகிகள் வந்த பின்பு ஆன்ட்ரியாவின் சாரீரம் அலுத்திருக்குமோ?

Read previous post:
ஸ்ருதிஹாசன் பாடுறாங்க… ஆனா விஜய் சார் ? புலி மியூசிக் டைரக்டர் தேவி ஸ்ரீ பிரசாத் பேட்டி

விஜய் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் போடுவது ஒன்றும் புதுசு இல்லை. ஆனால் இந்த முறை ‘புலி’ படத்தில் கமிட் ஆகியிருக்கும் பிரசாத்துக்கு தொண்டைக் குழியில்...

Close