அனிருத்தால் வந்த வினை விஜய் சிலிர்ப்பு, சிவா சிராய்ப்பு!

நல்லவை எங்கிருந்தாலும் அதை சுட்டுக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைக்கிற வழக்கம், சாமானியர்களுக்கு மட்டுமல்ல, ஏ.ஆர்.முருதாஸ் போன்ற பெரிய மனிதர்களுக்கும் உண்டு போலும். கத்தி படத்திற்காக நல்ல நல்ல பாடல்களாக போட்டுத்தர வேண்டும் என்று அனிருத்தை மேலும் ‘இளைக்க’ வைத்துக் கொண்டிருக்கிறார் முருகதாஸ். அடிப்படையில் ரஹ்மான் போலவே ராக் கோழியான அனிருத்தும், இரவெல்லாம் உறங்காமல் மாய்ந்து மாய்ந்து ட்யூன்களை போட்டுக் கொண்டிருக்கிறார். இது வேணும் அது வேணும்… என்று அவரை விடாமல் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் முருகதாசுக்கு திடீரென கிடைத்தது மூன்று லட்டுகள்.

சும்மா ஒரு ஓய்வு நேரத்தில், ‘டாணா படத்துக்கு நான் போட்ட பாட்டு. கேளுங்களேன்…’ என்று மூன்று பாடல்களை அனிருத் போட்டுக் காட்ட, ‘அட… இது நல்லாயிருக்கேய்யா’ என்றாராம் முருகதாஸ். அதை அப்படியே கொண்டுபோய் விஜய்யிடம் போட்டு காட்டியிருக்கிறார். ‘அமுக்கு விடாதே…’ என்று ஆர்ப்பரித்த இருவரும், அந்த மூன்று பாடல்களையும் ‘கத்தி’க்காக கடத்திவிட்டார்களாம். இதில் ஒரு பாடலை விஜய்யே பாடப் போவதாகவும் தகவல்.

அப்ப டாணா கதி? படத்தையே முடித்துவிட்டார்களாம். பாட்டுக்காக காத்திருக்கிறார்கள். ‘நாங்க கேட்டு ஓ.கே பண்ணி வச்சுருந்த பாட்டு. அதை எங்களுக்கே தெரியாமல் தாரை வார்த்துட்டாரே, அனிருத் இப்படி செய்வாருன்னு நினைச்சுக்கூட பார்க்கலே’ என்று பெருமூச்செரிகிறது சிவகார்த்திகேயன் வட்டாரம்.

2 Comments
  1. jaijay says

    anniyathauku siva puranam padringale annan …en???????????

    1. dinesh says

      sivakarthikeyan is one of the top heroes today..so there is no wrong in news about him..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தனுஷ் பர்த் டே புறக்கணித்தாரா சிவகார்த்தியேன்? அல்லது… அழைக்கவே இல்லையா?

ஒரு நாளும் இல்லாத திருநாள்’ என்பார்கள் சில நாட்களை மட்டும்! அப்படியொரு திருநாள்தான் இந்த வருட பிறந்த நாள் தனுஷுக்கு! வேலையில்லா பட்டதாரி தாறுமாறான ஹிட். குறைந்த...

Close