அஞ்சலி கைக்கு போன ஆக்சிடென்ட் ஸ்டில்! வாய் விட்டு சிரித்த அஞ்சலி

கடந்த இரு தினங்களாக கோடம்பாக்கத்தை குலுக்கி வரும் செய்தியே இதுதான். மு.களஞ்சியம் உயிர் பிழைப்பாரா? அதற்கு நடிகை அஞ்சலி பொருளாதார ரீதியாக உதவுவாரா?

மு.களஞ்சியம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட செய்தியும் கூட மிகுந்த கவலைக்குரியதாகவே இருந்தது. இதற்கிடையில் மருத்துவமனையில் மு.களஞ்சியம் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை அறிய தனது ஸ்பைகளை முடுக்கிவிட்டிருந்தாராம் அஞ்சலி. அவரது கட்டளையை செவ்வனே செய்து முடித்த அவர்கள், மு.களஞ்சியத்தின் தற்போதைய உடல்நிலை குறித்த தகவல்களையும் அவரது தற்போதைய புகைப்படத்தையும் கூட ரகசியமாக அனுப்பி வைத்தார்களாம்.

அதை பார்த்தவர், லேசாக புன்முறுவல் பூத்தாராம். ‘நல்லாதானே இருக்கார் ’ என்று நக்கலடித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மு.களஞ்சியத்திற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அவரது உடல் நலம் குறித்த விளக்கத்தையும் நாளிதழ்களுக்கு அளித்திருக்கிறார்கள். ‘அவரது கையில் அடிபட்டுள்ளது. கழுத்து தோள்பட்டை பகுதியில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றபடி அவருக்கு நினைவு தப்பவோ, மயக்கமோ இல்லை. இன்று காலை கூட அவருக்கு உதவி இயக்குனர் ஒருவர் கூல் ட்ரிங்ஸ் வாங்கி கொடுத்துவிட்டு போனார் என்று கூறியிருக்கிறார்கள்.

அப்படியென்றால் மு.களஞ்சியம் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று அதிர்ச்சியிலிருக்கிறது திரையுலக வட்டாரம்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வெற்றிமாறன் பாராட்டிய வளரும் ஹீரோ!

வளரும் ஹீரோவை வளர்ந்த ஹீரோக்கள் வாழ்த்துவதை விட பெரிய கொடுப்பினை வாகை சூடிய இயக்குனர்கள் தங்கள் வாயால் வாழ்த்துவதுதான். அரிது அரிது படத்தில் அறிமுகமாகி, சிந்து சமவெளி...

Close