இவரும் பாட்டெழுத வந்துட்டாரு…
ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிட ‘Film Department’ சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் ஜெய், சுரபி நடித்திருக்குக்கும் ‘புகழ்’ படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. தனது உதவி இயக்குனாரான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புகழ்’ திரைப்படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் வெற்றிமாறன்.
‘வடகறி’ படத்தில் அறிமுகமான விவேக்-மெர்வின் இரட்டையர்கள் ‘புகழ்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதைப் பற்றி கூறுகையில்
“ விழியில் வீழுந்தவளோ’ டூயட் பாட்டிற்கு ஹரிஹரன் சார் , சித்ரா மேடம் இருவரையும் மீண்டும் இணைந்து பாடியது மிகவும் இனிமையாய் இருந்தது. இருவரும் எங்களை புதியவர்கள் என்று கருதாமல் சக கலைஞர்கள் போல் நடந்துக் கொண்டது எங்களை நெகிழ வைத்தது. மறுபுறம் சமூக வலைதளங்களில் பெரிதும் வளம் வந்த வசனங்களை வைத்து FM புகழ் RJ பாலாஜி எழுதியுள்ள பாடல் ‘ போடு போடு ‘ பாடலில் அவரையும், டுப்பாக்கீஸ் என்ற Rap பாடகரையும் அறிமுகப் படுத்தியுள்ளோம்.” எனக் கூறினார் இரட்டையர்களில் ஒருவரான விவேக் சிவா.
“‘தும் ஹி ஹோ’ புகழ் அர்ஜித் சிங், நா. முத்துகுமார் எழுதிய ‘நீயே’ என்ற பாடலை பாடியுள்ளார். அவரை ‘வடகறி’ ‘நெஞ்சுக்குள்ள நீ’ பாடலுக்காகவே அணுகினோம் அப்பொழுது அவர் வேறு மொழியில் பாடுவதற்கு தயங்கினார். எனினும், அவரை தமிழில் பாட வைக்க வேண்டும் என்ற நோக்குடன் புகழ் படம் ஆரம்பித்தவுடன் ‘நீயே’ பாடலுடன் அணுகினோம். மறுக்க முடியாமல் பாடி தந்தார். அர்ஜித் சிங்கை நாங்களே அறிமுகப்படுத்துவது மிக்க பெருமையான விஷயம். மேலும், திவாக்கருடன் இணைந்து ‘நாங்க பொடியன்’ பாடலை அரை மணி நேரத்திலே முடித்துக் கொடுத்தார் அனிருத்.” எனக் கூறினார் மேர்வின் சாலமன்.
“மூத்த இசை கலைஞர்கள், வளர்ந்து வரும் பாடகர்கள் மட்டும் அறிமுக பாடகர்கள் என கற்றுகொடுத்ததும், கற்றுகொண்டதுமாய் இப்படத்திற்கு இசையமைத்தது புது அனுபவமாய் இருந்தது. இயக்குனர் மணிமாறன் பழக எளிமையானவர், இசைக்கு பெரிதும் முக்கியதுவமிருக்கும் ஒரு கதையை எங்களை நம்பி அளித்துள்ளார். சில காட்சிகளின் உணர்வை தக்க வைக்க பின்ணணி இசை உந்துகோலாக இருக்கும் வகையில் அமைத்துள்ளோம்.” எனக் ஒற்றை குரலில் கூறினர் விவேக்- மெர்வின் இசை இரட்டையர்கள்.