இவர்தான் அந்த குட்டி முருகதாஸ்!

எத்தனையோ த்ரில்லர்கள் வந்திருந்தாலும், அதிலும் ஒரு தினுசான த்ரில்லரை ட்ரை பண்ணியிருக்கிறார் குட்டிக்குமார். (ஏதோ க்ளாஸ்ட்ரோஃபோபிக் என்றார்கள்) ‘நீங்க ஒரு குட்டி முருகதாஸ்’ என்று இந்த குட்டிக்குமாரை மேடையில் பாராட்டினார் ஒருவர். அந்த ட்ரெய்லரை பார்க்கும்போது நமக்கும் அப்படியே தோன்றியதுதான் ஆச்சர்யம்.

‘ஆன்ட்டனி’ என்ற படத்தை இயக்கியிருக்கும் இந்த குட்டிக்குமார், படம் முழுக்க புது புது டெக்னீஷியன்களை பயன்படுத்தியிருப்பது இன்னும் சிறப்பு. அத்தனை பேரும் 30 வயதுக்கு குறைவானவர்கள். அதிலும் படத்தின் மியூசிக் டைரக்டர் ஷிவத்மிகா ப்ளஸ்டூ மாணவி போலிருக்கிறார். ஒரே ஒரு பாடலை திரையிட்டார்கள். அனிருத்துகள் பிச்சையெடுக்கணும்…!

பாட்ஷாவில் ரகுவரன் ஆன்ட்டனியா நடிச்சு இத்தனை வருஷம் ஆச்சு. இன்னமும் அவரோட நடிப்பை கிராஸ் பண்ற ஒரு நடிகர் வரவேயில்ல. அவருடைய இன்ஸ்பிரேஷன்லதான் இப்படியொரு தலைப்பு வச்சேன். நடிகர் லால் தன் மகனை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருப்பார். இது மேலே நடக்கும் திரைக்கதை. ஆனால் அவர் தேடும் அவரது மகனை காரோடு ஆறடிக்கு கீழே புதைத்திருப்பார்கள். உள்ளேயிருந்து அவர் தப்பிக்க முயற்சிப்பது ஒரு திரைக்கதை. கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணியிருக்கோம். பார்த்துட்டு சொல்லுங்க என்கிறார் குட்டிக்குமார்.

காருக்குள்ளிருக்கும் அந்த நபர் மரண பீதியுடன் தப்பிக்க போராட்டும் அந்த சில வினாடி காட்சியே நமக்கு மூச்சடைத்தது. அப்படியொரு தத்ரூபம்.

எப்படி அறம் என்ற படம் அப்படியே அதற்குள் இழுத்து நம்மை கரைய விட்டதோ, கிட்டதட்ட அப்படியொரு பினிஷிங் இப்படத்திலும் தென்படுகிறது. இளைஞர்களே… எங்க நம்பிக்கையை என்ன பண்ண போறீங்களோ, வெயிட்டிங்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Seyal | Tamil Movie Trailer

https://www.youtube.com/watch?v=pEUqsctaMUY

Close