முட்டிக்கொண்ட அனுஷ்கா, நயன்தாரா மூட்டிவிட்ட ஆர்யா!
ஒரு விறுவிறுப்பான சண்டை எங்கேயிருந்து துவங்கும்? பெரும்பாலும் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்படும் போதுதான். அப்படிதான் ஒரே பிராப்பர்ட்டிக்கு இருவர் ஆசைப்பட, அனுஷ்காவுக்கும் நயன்தாராவுக்கும் வாய்க்கால் வரப்பு தகராறு. நாம் இங்கே பிராப்பர்ட்டி என்று குறிப்பிடுவது யாரை? யாரும் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு பாடல் வெளியீட்டு விழா மேடையைதான் நாம் அப்படி சொன்னோம்.
அண்மையில் தனது தம்பி சத்யா நடித்த அமரகாவியம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை சத்யம் திரையரங்கத்தில் நடத்தினார் ஆர்யா. பாடல்களை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். முதலில் இதற்கான திட்டமே வேறாக இருந்ததாம் ஆர்யாவுக்கு. எப்படி? அனுஷ்கா வெளியிட நயன்தாரா பெற்றுக் கொள்வதாகதான் திட்டம். ஆனால் நயன்தாரா பெயரை கேட்டதுமே விளக்கெண்ணை குடித்தது போலானாராம் அனுஷ்கா.
அவ வந்தா நான் வரலே. வேறு யாரு வேணும்னாலும் வரட்டும். நான் வர்றேன் என்று ஆர்யாவிடம் கூறிவிட, அனுஷ்காவா? நயன்தாராவா? என்று கிளி சீட்டெடுத்து பார்த்தது. தமிழை பொருத்தவரை அனுஷ்கா என்றால் பெரிய அட்ராக்ஷன் இருந்துவிடப் போவதில்லை. அதுவே நயன்தாரா என்றால்? அவரும் அவர் நடிக்கும் படத்தின் விழாக்களுக்கே வருவதில்லை. அடுத்தவர் விழாவுக்கு வந்தால் இன்னும் பரபரப்பாக இருக்குமே? இப்படியெல்லாம் கணக்கு போட்ட ஆர்யா, நயன்தாராவை டிக் அடித்துவிட்டார்.
இதன் காரணமாக இரண்டு நடிகைகள் இப்போது ஆர்யா மீது அதிருப்தியில் இருக்கிறார்களாம். ஒருவர் அனுஷ்கா. இன்னொருவர் த்ரிஷா. ஆர்யாவை பொருத்தவரை நாம் வெறும் சப்ஸ்டியூட்தானா என்கிற வருத்தம்தானாம் அது.