அனுஷ்கா ‘ம்ஹும்! ’ லிங்கா ‘டென்ஷன் ’
டாக்கி போர்ஷன் முடிஞ்சாச்சு. இனி பாடல்கள்தான். ரிக்ஷா ஓட்டுகிற ஹீரோவாக இருந்தாலும் கனவு காட்சிக்கு சுவிஸ் போவதுதானே தமிழ்சினிமாவின் ‘தர லோக்கலு’ சமாச்சாரம்? ரஜினியை மட்டும் தப்ப விடுவார்களா என்ன?
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கிறார்கள். சோனாக்ஷி ஃபாரினுக்கு கிளம்ப ரெடி. ஆனால்? அனுஷ்காவுக்கு ஐயோடா என்றிருக்கிறதாம். ‘நான் வரல. நீங்க போயிட்டு வாங்க’ என்று கூறிக் கொண்டிருக்கிறாராம். தேனிலவுக்கு தனியா போகிற மாப்பிள்ளை மாதிரி சீரியஸ் ஆகிக்கிடக்கிறது லிங்கா குழு. பிளாஷ்பேக் ரஜினிக்கு சோனாக்ஷி ஜோடி. நிகழ்கால ரஜினிக்கு அனுஷ்கா. அட்லீஸ்ட் ஆளுக்கு ரெண்டு டூயட்டாவது வைக்கணும். இந்த முக்கியமான விஷயத்தில் முடியாது என்று மறுத்தால்? அல்லது அதற்கு சரியான காரணத்தையாவது சொல்ல வேண்டும் அல்லவா?
நான் வரல என்பதையே பதிலாக சொல்லிக் கொண்டிருக்கிறாராம். இதனால் டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் செம டென்ஷனில் இருக்கிறாராம்.
ரஜினிக்கேவா?