சொந்த குரலில் பேசணும்… அஜீத் படத்தில் அனுஷ்காவுக்கு நிர்பந்தம்!

‘ஐ லவ் அனுஷ்கா’ என்று தமிழ்நாட்டு வாலிபன்ஸ் தவம் கிடக்க, ஆந்திராவை விட்டு நகர மறுக்கிறது அனுஷ்கா தென்றல்! நல்லவேளையாக இளைஞர்களின் குரலாக ஒலித்திருக்கிறார் கவுதம் மேனன். தெலுங்கு பட ஷுட்டிங்கை முடிச்சுட்டு சீக்கிரம் சென்னைக்கு வாம்மா என்று படுத்திக் கொண்டிருக்கிறாராம். பிளாஷ்பேக்கில் வரும் அஜீத்திற்கு த்ரிஷா ஜோடி. மற்றொரு அஜீத்திற்கு அனுஷ்கா ஜோடி. பொதுவாகவே தன் பட ஹீரோயின்களை அழகாக காட்டுவதில் கவுதமுக்கு நிகர் கவுதமே. சமீரா ரெட்டியையே தங்க ரொட்டியை போல காண்பித்தவர் அவர்.

இந்த படத்தில் இவ்விருவருக்கும் தனி அக்கறை எடுத்துக் கொள்ள சொல்லி அறிவுறுத்தியிருக்கிறாராம் ஒளிப்பதிவாளரிடம். அப்படியே இன்னொரு முக்கியமான தகவல். இந்த படத்தில் அனுஷ்கா சொந்த குரலில் பேசப் போகிறார். இதுவரை தமிழ் தெலுங்கு என்று முப்பத்தைந்து படங்களில் நடித்திருந்தாலும், ஒரு படத்திலும் சொந்த குரலில் பேசியதில்லை அனுஷ்கா. அதனால் இப்படியொரு ஆசையை கவுதம் தெரிவித்ததும், ‘என் குரலை எனக்கே பிடிக்காது. என்னை பேச சொல்றீங்களே?’ என்று நொந்து கொண்டாராம்.

உடனே அனுஷ்காவை ஒரு டப்பிங் தியேட்டரில் பேச வைத்து அதை அவருக்கே போட்டுக் காட்டினாராம் கவுதம். இவ்வளவு மெனக்கெடல்களுக்கு பிறகு, அனுஷ்கா சொந்த குரலில் பேச ஒப்புக் கொண்டிருக்கிறார். த்ரிஷாவும் இதற்கு முன்பு சொந்த குரலில் பேச ஆரம்பித்துவிட்டார். எனவே இந்த படத்தில் அவரும் சொந்த குரலில் பேசவிருக்கிறார்.

குரலு எதுவா இருந்தா என்ன? மயிலு மந்தாரமா இருந்தா சரிதான்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஈ காக்காய் கூட எட்டிப்பார்க்காத வியாபார ஷோ?

ஒரு மிகப்பெரிய ஹிட் படம் கொடுத்த ஒரு ஹீரோவுக்கு இன்றைய தேதியில் ஜீரோவுக்கான மரியாதை கூட இல்லை. இந்த பேரதிர்ச்சியில் இருந்து விடுபட முடியாமல் ஹீரோ தவியாய்...

Close