இதுக்கெல்லாமா பரிகாரம் பண்ணுவாங்க அனுஷ்கா?

ஆந்திரஜோதி அனுஷ்காவை பீஸ் போக வைத்துவிட்டது அந்த சம்பவம். பல கோடி ரூபாய் செலவில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் ருத்ரம்மா தேவி படப்பிடிப்பில் நடந்த கதைதான் உங்களுக்கெல்லாம் தெரியுமே? இருந்தாலும் ஒரு ரிமைண்டர். ருத்ரம்மாதேவியாக நடித்துக் கொண்டிருக்கும் அனுஷ்கா அணிந்து கொள்வதற்காக 500 பவுன்களில் செய்யப்பட்ட நகைகளை வரவழைத்தார்கள். அவ்வளவும் சென்னையின் பிரபல நகைக்கடையிலிருந்து போனது.

பொதுவாக இதுபோன்ற காட்சிகளில் கவரிங் நகைகளைதான் பயன்படுத்துவார்கள். ஆனால் அப்படி அணிந்தால் ஸ்கின் அலர்ஜி வரும் என்று அனுஷ்கா கவலைப்பட்டதால்தான் அசல் நெய்யில் செய்யப்பட்ட ஒரிஜனல் அல்வாவை இறக்குமதி செய்தார்கள். வந்த இடத்தில்தான் எந்த புண்ணியவானோ, அத்துமீறி ஆட்டைய போட்டுவிட்டான். நகைகள் பறி போன சம்பவம் ஆந்திராவை அல்லோலகல்லோல பட வைத்தது. 500 ம் போச்சு என்று எல்லாரும் ஒப்பாரி வைக்க, இல்லையில்லை. போனது வெறும் 100 தான். இருந்தாலும் தேடிக் கொண்டிருக்கிறோம் என்ற தன்னிலை விளக்கம் அளித்தது ருத்ரம்மாதேவி பட நிர்வாகம்.

இதற்கிடையில் நகைகளை அணிந்து நடிக்கும் நீயே ருத்ரம்மாதேவி. உன் கழுத்தில் அணிந்த நகைகள் காணாமல் போனால், அது அந்த அம்மனின் நகையே காணாமல் போனதற்கு சமம் என்றாராம் பூசாரி புண்ணியகோடி. வேறென்ன செய்வது? என்று பதறிய அனுஷ்காவிடம், அந்த ருத்ரம்மா தேவி ஆலயத்திற்கே வந்து பரிகார பூஜை செய் என்றாராம். அதற்கப்புறமும் தள்ளிப்போட அவர் நாத்திக நங்கையா? ஆத்திகத்தின் தங்கையாச்சே? பட்டென கிளம்பி கோதாவரி ஆற்று கரையோரம் இருக்கும் கோவிலுக்கு போய் பரிகார பூஜைகளை செய்துவிட்டு திரும்பினாராம்.

நகை கிடைச்சுச்சா…? இன்ஷுரன்ஸ் கிடைச்சுருக்கும்!

Read previous post:
‘பாதுகாப்பு கொடுங்க…’ கேட்காத விஜய், கொடுக்காத போலீஸ்!

லைக்கோ, லைக் இல்லையோ? கடந்த ஒரு மாதமாகவே நாளிதழ்களையும் இணையங்களையும் இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறது லைக்கா விவகாரம். தெரியாமல் இதில் சிக்கிக் கொண்ட விஜய், இதிலிருந்து எப்படி...

Close