நமீதாவாகிறார் அனுஷ்கா? கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்
‘மிஸ்டர் பிரமாண்டம்’ என்பார்கள் டைரக்டர் ஷங்கரை. தான் எடுக்கிற படங்களால் அந்த நற்பெயர் அவருக்கு. ஆனால் ஒரு நடிகையாக இருந்தும், உணவுக்கட்டுப்பாடுகள் இருந்தும், உடற்பயிற்சிகள் மேற்கொண்டும், நாளுக்கு நாள் மிஸ் பிரமாண்டம் ஆகிக் கொண்டிருக்கிறார் நமீதா. அவரென்ன செய்வார்…. பாவம்? பாழாய் போன அந்த தைராய்டுதான் காரணமாம். இருந்தாலும் மீண்டும் உடல் இளைத்து சிக்கென்றாகி இதே தமிழ்நாட்டில் சிக் நமீதா என்ற பெயருடன் வலம் வராமல் விடமாட்டேன் என்று கடும் சபதம் எடுத்து போராடி வருகிறார். வெல்க அவர் லட்சியம்!
அவருக்காவது இயற்கையிலேயே பிரச்சனை. ஆனால் அனுஷ்கா விஷயத்தில் அப்படியில்லை. அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக 14 கிலோ எடை ஏற்ற வேண்டும் என்று கூறிவிட்டாராம் டைரக்டர். அதற்காக கடந்த சில வருடங்களாக இருந்து வந்த குடல் இறுக்க பயிற்சியை கைவிட்டுவிட்டு குடல் பெருக்க பயிற்சியை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்று ரங்காராவ் ஒரு படத்தில் வெட்டித் தள்ளுவாரே… அப்படி வெட்ட ஆரம்பித்திருக்கிறாராம்.
அவர் உடல் பெருகி வரட்டும் என்பதற்காக ஒரு மாதம் ஷுட்டிங்குக்கே பிரேக் விட்டுவிட்டு காத்திருக்கிறது இஞ்சி இடுப்பழகி டீம். ஆளு பெருத்துட்டா இடுப்பு எது? தோள்பட்டை எதுன்னே புரியாதே…? இதுல எங்க இஞ்சி இடுப்பை காட்டி ஏக்கத்தை கூட்டுறது? ஏனுங்க டைரக்டரே…. உங்களுக்கு ரசனைங்கறதே இல்லையா?