பிரபாஸ்க்கு வேறு பெண் முடிவு? கடும் விரக்தியில் அனுஷ்கா! குடும்பம் குதறிய காதல்?

போன மாசம் வரை இந்த செய்தியில் பிரபாஸ்சை பிரதானப்படுத்தியிருந்தால், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு தவுடும் புரிந்திருக்காது. உமியும் புரிந்திருக்காது. பாகுபலிக்கு பின்தான் பிரபாஸ் ஆல் லாங்குவேஜ் ஆணழகனாச்சே? கொட்டாம்பட்டி ரசிகனுக்கும் இந்த பிரபாசை தெரிந்திருப்பதால், அவரது கல்யாணம், காதல் தோல்வி பற்றியும் சொல்லித் தொலைவோமே?

ஆந்திராவே அல்லோகல்லோலப்படுகிறது பிரபாஸ் பற்றிய செய்திகள் எது வந்தாலும். அதுவும் அனுஷ்காவுக்கும் பிரபாசுக்கும் லவ். பாகுபலி இரண்டாம் பாகம் முடிந்ததும் கல்யாணம்தான் என்று வருகிற செய்திகளை ரொம்பவே ரசிக்கிறது. இந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத அதிர்ச்சி. தமிழில் அனுஷ்காவோடு நெருங்கி பழகி வரும் சில நடிகைகள் தங்களுக்குள் கவலைப்பட்டுக் கொண்டதைதான் கர்ம சிரத்தையாக மக்களுக்கு பாஸ் பண்ணுகிறது நியூடமில்சினிமா.காம்.

பிரபாஸ்க்கு ஒருமுறை கடுமையான உடல் நல பிரச்சனை வந்தபோது அருகில் இருந்து தாய் போல கவனித்துக் கொண்டவர் அனுஷ்காதானாம். அதில்தான் காதலாகி கசிந்திருக்கிறார் பிரபாஸ். அதற்கப்புறம் பாகுபலி ஷுட்டிங் இருவருக்குமான அன்பை இன்னும் கெட்டிப்படுத்தியிருக்கிறது. இந்தநிலையில் இருவரது காதலும் வெளிச்சத்திற்கு வந்தது. அனுஷ்காவைதான் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று தெலுங்குச் சேனல்கள் முழங்குகிற அளவுக்கு போனது நிலைமை.

அங்குதான் திருப்பம். இதற்கு பிரபாசின் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவேயில்லையாம். உடனடியாக அவருக்கு பொருத்தமான பெண் ஒன்றை தேடி நிச்சயதார்த்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை தடுக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறாராம் பிரபாஸ். இப்படியொரு தகவல் வந்த நாளில் இருந்தே கடும் மன உளைச்சலுக்கு ஆளான அனுஷ்கா, யாருடைய தொடர்புக்கும் சிக்காமல் தனிமையில் தவிப்பதாக தெரிகிறது.

அனுஷ்கா பிரபாஸ் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக இந்த காதல் தோல்வியை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா? விபரீதமாக ஏதும் நடந்துவிடக் கூடாதே என்பதுதான் அவரது தமிழ்ப்பட தோழிகளின் கவலையாக இருக்கிறது.

நடிகையாக இருந்தாலும், அவருக்கும் மனசு இருக்கிறதல்லவா?

Read previous post:
வேதாளம் விமர்சனம்

அஜீத் ரசிர்களுக்காகவே ‘ஆர்டர் கொடுத்து’ செய்யப்பட்ட படம்! வர வர ‘சால்ட்’ தூக்கலாகவும், ‘பெப்பர்’ குறைச்சலாகவும் ஆகிக் கொண்டிருக்கிறார் அஜீத். ஆனால் கட்டைய தூக்குனாலும் கை தட்டுவாங்க....

Close