உங்களை ஊருக்கே தெரிய வச்சுது சினிமா!

அது கழுத்தை நெரிக்கிறீங்களே உதயநிதி?

கழகத்தின் வருங்கால வைப்பு நிதி உதயநிதிக்கு, திடீர் திடீரென எப்படிதான் ஐடியா முளைக்கிறதோ? சமயங்களில் செல்லூர் ராஜூ போல பேசி வரும் அவரை திகிலோடு கவனிக்க ஆரம்பித்திருக்கிறது திரையுலகம். அவரது இன்றைய ட்விட், உலக மகா விசித்திரம்.

‘காவேரி மேலாண்மை வாரியம் அமையும் வரை எந்த சினிமாவையும் ரிலீஸ் செய்ய மாட்டோம்’ என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவிக்க வேண்டும். இதுதான் உதயநிதியின் ட்விட். கடந்த ஒன்றரை மாதங்களாக வயிறு காய்ந்து, உதடுகள் ஈரப்பசை இல்லாமல் தவித்து வரும் பெப்ஸி தொழிலாளர்கள் முன் இந்த வார்த்தையை அவர் சொல்லியிருக்க வேண்டும். அடுத்த மாதம் ஸ்கூல் பீஸ் கட்டணும். இந்த மாச வாடகைக்கே ஆள் பதுங்கல் என்கிற சினிமா தொழிலாளர்களுக்கு உதயநிதியின் ட்விட் எவ்வளவு ஆத்திரத்தை ஏற்படுத்தும்?

போகட்டும்… உதயநிதி ட்விட் போடுவதற்கு வசதியாக மேலும் சில ஐடியாக்கள்.

காவேரி மேலாண்மை வாரியம் அமையும் வரை ஓட்டல்கள் திறக்கக் கூடாது. பஸ்கள் ஓடக் கூடாது. எந்தக் கட்சியும் மைக்கை ஆன் பண்ணக்கூடாது. பேரணி கூடாது. நடை பயணம் ஆகாது. வேஷ்டி சட்டையை துவைக்கவே கூடாது என்றெல்லாம் கூட ட்விட் போடுங்களேன்.

யாராவது கேட்கவா போகிறார்கள்?

(ஐ.பி.எல் ஐ மட்டும் நிறுத்தலாமா? என்று கேள்வி கேட்கும் பிரகஸ்பதிகளுக்கு, உலகத்தின் பார்வையை நம் பிரச்சனையை நோக்கி திருப்பும் யுக்தி அது என்று சொல்லி புரிய வைக்க முடியாது. எனவே… உதயநிதியின் கருத்தோடு ஒத்துப் போகிறவர்கள் இந்த நிமிஷத்திலிருந்து ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் போவதை கூட நிறுத்திக் கொண்டு அவருக்கு பேராதரவு வழங்கலாம்)

1 Comment
  1. manikandan says

    ஏனீ சினிமா டிவி எல்லாத்தையும் நிப்பாட்டுங்களேன் உலககவனம் கிடைக்குமே ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி யா இரண்டு மாசம் இதே தொழிலாளிகள் சும்மா தானா இருந்தாங்க அப்ப துடிக்காத மீசை இப்ப எதுக்குடா துடிக்குது

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முடிவுக்கு வந்த ஸ்டிரைக்! விஷாலுக்கு கிடைத்தது வெற்றியா தோல்வியா?

Close