மகளே கவலைப்படாதே… நான் இருக்கேன்! அதிரடி அர்ஜுன்
ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்போது ஆண் கங்காரு ஆகியிருக்கிறார். குட்டியை மடியில் சுமக்கும் கங்காரு அது வளரும் வரை எப்படி பாதுகாக்கிறது என்பதை யாரும் சொல்லி புரிந்து கொள்ள தேவையில்லை. அதே போல தனது மகள் ஐஸ்வர்யாவின் சினிமா வாழ்வை தாங்கி பிடிக்க தயாராகிவிட்டாராம் அவர். எப்படி?
பொதுவாக அர்ஜுனின் படங்கள் டவுன் ஆகும் போதெல்லாம் அவர் ஒரு ஆயுதத்தை கையில் எடுப்பார். தானே தயாரித்து தானே இயக்கி தானே நடித்துவிடுவது என்பதுதான் அந்த ஆயுதம். அதற்கப்புறம் அந்த படம் ஷ்யூர் ஹிட் அடிக்கும் என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை. தமிழ்சினிமாவில் பலமுறை இந்த வித்தையை நிரூபித்த அர்ஜுன் இப்போது தனது மகளின் சினிமா ஆர்வத்தில் விழுந்த ஏமாற்றத்தை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறார்.
விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் ஜோடியாக அறிமுகம் ஆன ஐஸ்வர்யா, அந்த படத்தின் வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும் மனம் தளராமல் வெளிநாட்டுக்கு படிக்க சென்று விட்டார். அவர் மீண்டும் திரும்பி வரும் வரைக்கும் காத்திருக்க விரும்பாத அர்ஜுன் சுட சுட ஒரு கதையை மகளுக்காக உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். எல்லாம் தயாரானதும் மகளை அழைத்து படத்தில் நடிக்க வைக்கும் முடிவிலிருக்கிறார்.
தந்தை மகளுக்காற்றும் உதவி….?