அர்னால்டை ‘வண்டுமுருகனா’க்கிய ஐ படக்குழு. – தேனி கண்ணன்

ஷங்கரின் இயுக்கத்தில் ஐ படம் எப்போது முடியும் என்ற ஆவல் உலகம் முழுதும் பரவிக்கிடந்தது மறுக்க முடியாதது. காரணம் ஷங்கரின் அசாத்திய உழைப்பு. படமும் ஒரு வழியாக முடிந்து பாடல் வெளியீட்டு விழாவும் நடந்தது. விழாவிற்கு ஹாலிவுட் சூப்பார் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஷநேஹர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது ஏகப்பட்ட எதிர்பார்ப்போடு ரசிகர்கள் குவிந்து விட்டனர்.

நிகழ்ச்சி ஐந்தரை மணிக்கே துவங்கிவிடும், அதனால் ரசிகர்கள் ஐந்து மணிக்கே அரங்கில் இருக்க வேண்டும் என்றதால் நான்குமணியிலிருந்தே கூட்டம் கூரையை பிய்த்தபடி இருந்தது.

காதைக் கிழிக்கும் இசை மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது. நேரம் ஓடிக்கொண்டே இருக்க, பார்வையாளர்கள் மத்தியில் விசில் சபதமும் அதிர்ந்தன. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மேடைக்கான படிகளை அப்போதுதான் அடித்துக் கொண்டிருந்தனர். வி.ஐ.பிகள் ஒவ்வொருவராக வந்து அமந்துகொண்டிருந்தனர். நேரம் போய்க்கொண்டே இருந்தது. ரஜினியும், அர்னால்டும் அரங்கில் நுழையும்போது மணி ஏழரையை நெருங்கியிருந்தது. ஆனால் அப்போதும் மேடை தயாரகவில்லை. இதற்கிடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்ற பெயரில் சின்மயி அசால்ட் பாபி சிம்ஹா இருவரும் ஆடியன்ஸை அறுத்து எடுத்தனர். சின்மயி நீண்ட நேரம் அமர்ந்திருந்த கடுப்பும், களைப்பும் முகத்தில் தெரிய அமர்ந்திருந்த ரஜினியிடம் சின்மயி “தலைவா விகரம் பற்றி சொல்லுங்க” என்று மைக்கை நீட்ட “என்னை பேசக்கோப்பிடுவீங்கல்ல அப்போ பேசுறேன்” என்று படட்டென்று சொல்லி விட்டார் ரஜினி.

இதுபோதாதெ்ன்று பாடல்களை மேடையில் பாடிய போது கிட்டதட்ட ஆடியன்ஸ் கொட்டாவி விட ஆரம்பித்தனர். ஒரு ரசிகர் எழுந்து, “ஏன்ம்பா ஒரு இண்டர்நேஷனல் ஆக்டரை வச்சிகிட்டு என்னப்பா கூத்தடிக்கிறீங்க” என்று நம் காதுபடவே கத்தி தீர்த்தார். பாவம் அது ஷங்கருக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை.

மேடைக்கு இப்போது சீயான் விகரம் வருவார் என்று சின்மயி அறிவிக்க அவர் வரவில்லை ஏதோ குழப்பம் என்று பத்து நிமிடங்கள் கழித்து “ஸாரி அவர் அப்புறம் வருவார்” என்றுசொல்லி அனிரூத்தை பாட அழைத்தார்கள். அவர் மேடையிலிருந்த ஒரு வித்தியாசமான செட்டின் அருகிலிருந்து பாடியபடியே இறங்கி வந்தார். ஆனால் பாடலும், இசையும் யாரையும் ஈர்த்ததாக தெரியவில்லை.

அதன் பிறகு மேடையில் ஒரு கூண்டு செட்டை நிறுவ ஆணி அடிக்கும் பணி நடந்தது அதற்கு பதினைந்து நிமிடங்கள் ஆனது. பிறகு பாடல் ஒலிக்க அசுர வடிவில் இருந்த விகரம் பாடி நடித்துக்கொண்டு எமியோடு ஆடினார். அந்த வேடம் மட்டும் பிரமாண்டமாக இருந்தது. அவருக்கு அர்னால்ட் கைதட்டி தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். ஆனால் விகரம் தொகுப்பாளராக இருந்த சிம்ஹாவிடம் ’நான் உங்க படம் பார்த்தேன் நல்லா இருந்தச்சு பாஸ்’ என்று எல்லோரையும் வெறுப்பேற்றினார். ஏற்கனவே பலகால தாமதம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் பாராட்டிக்கொள்வது அவசியம்தானா..

அடுத்து இந்தியா முழுவதுமிருந்தும் தயார் செய்யப்பட்ட பாடி பில்டர்ஸ் வந்து தங்கள் திறமையை காண்பித்து மேடையில் இருந்தபடி அர்னாடுக்கு வணக்கம் வைத்தனர். அதோடு விட்டிருக்கலாம். உணர்ச்சிவயப்பட்டு ஒவ்வொருவராக வரிசையாக வரவழைக்கப்பட்டு அவர்முன் மண்டியிட்டு வணக்கம் தெரிவித்தனர். அர்னாடிற்கு அவர்களின் மரியாதையை புரிந்து கொள்ளமுடிந்தது. ஆனால் ஏன் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரியாமல் விருட்டென்று எழுந்து அவர்களை தொட்டு எழுப்பி ஒவ்வொருத்தருக்காய் கைகொடுத்துப் பாராட்டு தெரிவித்தார். அதன் பிறகு அர்னால்டு என்ன செய்ய வேண்டும் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு தெளிவுபடுத்தாததால் அந்த பாடி பில்டர்ஸை அழைத்துக்கொண்டு மேடையேற்இனார். அரங்கம் அதிர்ந்தது. ஆனால் அர்னால்ட் அவஸ்தையில் இருப்பதை காண முடிந்தது. காரணம் உடல்முழுதும் எண்ணை பூசிய பாடிபில்டர்ஸ் அப்படியே அர்னால்டை சூழ்ந்து கொண்டும் கட்டிபிடித்தபடியும், அவர் கைகளை உயர்ந்திப் பிடித்தபடியும் அவரை தேனீக்கள் போல மொய்த்தனர் இதில் அர்னால்ட் என்ன செய்தஎன்றே தெரியாமல் அவரே பாடி பில்டர்ஸை கட்டுப்படுத்தினார். நிலமை அந்த அளவிற்கு மோசமானது. போதாக்குறைக்கு தொகுப்பாளர் பாபி ச்ம்ஹா வேறு இடையிடையே அர்னால்டிடம் ஏதோ சொல்ல முயல அதில் அவர் குழம்பிப்போனார். இவற்றையெல்லாம் சிரித்தபடியே உட்கார்ந்து ரசித்துக்கொண்டிருந்தார் ஷங்கர் இதுதான் பெரிய வேதனை

ஏழுமுறை மிஸ்டர் யுனிவர்ஸ், எட்டு ஆண்டுகள் கலிஃபோர்னியா மாகாண கவர்னர் இப்படி பல பெருமைகளை கொண்ட அட்னால்ட் விழாவிற்கு விருநதினராக வந்ததோடு இல்லாமல் தானே முன் வந்து மேடையை ஒழுங்கு படுத்தும் அளவிற்கு நிலமை மோசமாகிப்போனது, ரஜினியும் என்ன ஆகப்போகிறதோ என்ற டென்ஷனில் அமர்ந்திருந்தார். அடிக்கடி உதட்டை நாக்கால் ஈரப்படுக்கிகொண்டார்.

அணிந்தருந்த கோட், கைகள் முழுவதும் எண்ணை பிசுக்காக இருந்ததால், டென்ஷனுடன் நேரே போய் மைக்கை பிடித்து விட்டார் அர்னால்ட். அவர் பேச முயலும்போது, அங்கு வந்த தொகுப்பாளர் பாபி சிம்ஹா ஏதோ சொல்ல, அர்னால்டின் உயரத்திற்கு அவரால் அவர் காதில் விஷயத்தை சொல்ல முடியவில்லை. உடனே என்ன செய்தார் தெரியுமா கலிஃபோர்னியாவின் முன்னாள் கவர்னைரான அர்னால்டின் தோளில் கைவைத்து அவர் உயரத்திற்கு வளைத்து வண்டு முருகானாக்கினார். இதில் ரொம்பவே கடுப்பாகிப் போனார் அர்னால்ட்.

சிம்ஹா சொல்ல வந்தது இதுதான், “நீங்கள் பேச வேண்டிய நேரம் இதுவல்ல. ஆடியோ வெளியிடும்போது பேசலாம்” என்பதுதான் ஆனால் அர்னால்ட் அதை பொருட்படுத்தாமல் ”நான் என்னுடைய ஸ்டைலில் இப்போதே பேசி விடுகிறேன்” என்று பேச ஆரம்பித்து விட்டார்..

விழாக்களில் நம்ம ஊரில் கூத்தடிப்பதுபோல அங்கு இருப்பதில்லையே . அவர்கள் ஊர் மேடை நாகரிகத்தை அர்னால்ட் கடை பிடித்து மேடையேறிய உடனே பேச விரும்பினார் .தான் எழுதிக்கொண்டு வந்திருந்த பேச்சை மேடையில் வாசிக்க ஆரம்பித்தார் அர்னால்ட். “தமிழ் மக்களின் பாசம் என்னை பிரமிக்க வைக்கிறது. நான இந்த பட விழாவிற்கு மட்டும் வரவில்லை. ஷங்கரிடம் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்க வந்திருக்கிறேன். என்னுடைய கேனான் தி டெஸ்ட்ராய்டு படத்தை மறுபடியும் எடுக்க வேண்டும் அதில் நான் ந்டிக்க வேண்டும். அது முடியுமா என்று ஷங்கரை பார்த்துக் கேட்டார்.” கீழே அமர்ந்திருந்த ஷங்கர் காட்டைவிரலை உயர்த்திகாட்ட ”தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் மேடையின் பின்புறம் போய்விட்டார். எல்லோரும் அவர் மறுபடியும் மேடைக்கு வருவார் என்று ரஜினி, ஷங்கர் உட்பட எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்க அர்னால்டின் கார் விமான நிலையத்தை நோக்கி சீறிப்பறந்தது. இந்த தகவல் ஷங்கரிடம் சொல்லப்பட, ஷங்கரின் முகத்தில் இருள் சூழ்ந்தது. அவர் பதறிப்போய் ரஜினியை அழைத்துக்கொண்டு வேகமாக மேடையேறினார். ்குழப்பத்தின் உச்சத்தில் இருந்தது விழா மேடை. ரஜினி, ஷங்கரிடம், “அப்போ நானும் பேசிட்டு கிளம்பவா” என்றதும், வாடிய முகத்க்தோடு ரஜினியிடம் கெஞ்சலாக சிறிது நேரம் இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் அப்போதும் திருந்தாத மேடை கோஷ்டி அடுத்த பாடலை பாட ஆரம்பித்தனர். இந்த முறை ரஜினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. கடும் கோபத்தில் அவர் அமர்ந்திருப்பதை க்ளோசப் டிஜிட்டல் திரைகள் பளிச்ச்ட்டுக் காண்பித்தன. ஷங்கர் ரஜினி காதில் “ஸாரி,..ஸாரி சார்” என்று பல முறை சொல்லிக்கொண்டிருந்தார். உடனே பாடல் வெளியீட்டு விழாவை நடத்தினர். அர்னால்ட் சென்னை வருவதற்கு தனி விமானம், அவருடன் பத்து நபர்கள்,, அவர் வந்து போக மட்டும் தனியாக அவருக்கு பத்துகோடி என்று தண்ணீராக பணத்தை செலவழித்தும் பாடல் வெளியீட்டின் போது அவர் இல்லாமல் நிகழ்ச்சியின் நோக்கமே நிறைவேறாமல் போனது. இந்த நேரத்தில்தான் சின்மையி “பாடலை ஆந்திர சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் வெளியிட ரஜினி பெறுக்கொள்வார்”: என்று ஒரு சீனியாரிட்டி கூட தெரியாமல் உளர, ச்ட்டென்று கோபத்தில் ஷங்கர் பார்த்த பார்வையில் ஆயிரம் வோல்ட் ஷாக். மறுபடியும் “ரஜினி வெளியிட புனித் ராஜ்குமார் வாங்கிக்கொள்வார்” என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி ஐ படவிழாவிஷங்கருக்கு நேர இருந்த அவமானத்திலிருந்து அவரை காப்பாற்றியனார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அரசு விழா போல் கட்டுக்கோப்பாக நடக்க வேண்டிய விழா கட்டவிழ்த்த ஜல்லிக்கட்டு திருவிழாபோல் ஆனது. எவ்வளவு பெரிய கேரக்டரையும் படத்தில் அசால்ட்டாக செய்யும் சிம்ஹா இவ்வளவு பெரிய விழாவின் நோக்கத்தையே சிதைத்து விட்டாரே என்பது ஆச்சரியம்தான்.

எப்படியோ வானளாவிய புகழ் படைத்த அர்னால்டை வரவழைத்து வண்டு முருகனாக்கி விட்டனர் ஐ படக்குழுவினர்.

நன்றி – தின இதழ் நாளிதழ்

1 Comment
  1. ram says

    “I” will be a flop

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மதன் கார்க்கியின் பேங் பேங்

இந்த வருடத்தின் மிக பிரம்மாண்டமான படம் என இந்திய திரைப்பட துறையையே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் இளம்பெண்களின்   கனவு நாயகன் ஹ்ரிதிக் ரோஷன் - இளைஞர்களின் கனவு...

Close