ஐயோ பாவம் அரவிந்த்சாமி! பாலா அழைக்கிறார்…

இந்த போட்டோவுக்கு வசனம் தேவையில்லை என்பது மாதிரிதான் சில செய்திகளுக்கான முன் குறிப்பும்! பாலா படத்தில் நடிக்க கமிட் ஆகிற அத்தனை பேரும் ஏதோவொரு விதத்தில் இம்சைக்குள்ளாவார்கள் என்பது நாளும் கோளும் அறிந்ததே! இப்படி நெட் வேறு போல்ட் வேறாக கழண்டாலும் கடைசியில் நெட் ரிசல்ட் என்னவோ ஆஹா ஓஹோ என்பதால் இந்த இம்சைக்கு தன்னை அர்பணித்துக் கொள்வார்கள் பல நடிகர்கள்.

ஆனால் பிரிட்ஜில் வைத்த தக்காளி பழமாகவே காட்சியளிப்பதுடன், படப்பிடிப்பிலும் அவ்வாறு நடந்து கொள்ளும் அரவிந்த்சாமி, இந்த சித்ரவதைக் கூடத்திற்குள் ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்கிற தகவல்தான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பெரிதும் கவனிக்கப்பட்டிருக்கிறார் அரவிந்த்சாமி. “முன்னாடி ரெண்டு முரட்டு பல்லு வச்சுகிட்டு நீங்க வந்து மிரட்றீங்க சார்…” என்று கொடூர கொந்தளிப்பு கேரக்டர்களுடன் தன்னை நாடி வரும் இயக்குனர்களை, பெரும் ஆத்திரம் வந்தாலும் புன்னகையோடு சமாளித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார் அரவிந்த்சாமி.

இந்த நிலையில்தான் பாலாவிடமிருந்து அழைப்பு போயிருக்கிறதாம் அவருக்கு. வெயில்ல போட்டு உருட்டுவாரு. வேளைக்கு சோறு கொடுக்க மாட்டாரு போன்ற கம்ப்ளைன்ட்ஸ் இருந்தாலும், பாலா அழைப்பாச்சே? பரவால்ல நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம் அரவிந்த்சாமி.

தம்பிக்கு ஒரு தார் டின்னு பார்சேல்…..!

Read previous post:
இப்பதான் கம்ப்யூட்டர், போட்டோஷாப்பெல்லாம்! அப்போது ஜெயராமன்தான்…

தமிழ் திரைப்படவுலகில் மறக்க முடியாத ஒரு பெயர் டைட்டில் ஜெயராமன். சுமார் 1000 திரைப்படங்களுக்கு டைட்டிலில் இடம் பெறும் நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின்...

Close