சம்திங் க்ரூயல்! இதுதான் ஆர்யாவோட கெட்ட நேரம்ங்கறது?
‘சம்திங் ஸ்பெஷல்’ என்று ஒரு காலத்தில் கொண்டாடிய நட்பெல்லாம், ஒரு கட்டத்திற்கு மேல் ‘சம்திங் க்ரூயல்’ ஆகிற நேரம் ஒன்று வந்தால் அதைதான் கோட்டான் விழிக்கிற நேரம் என்பார்கள் சினிமாக்காரர்கள். இப்போது ஆர்யாவுக்கு கோ.வி.நே! எழுதறதுக்கு எதுவுமே இல்லேன்னா, ‘ஆர்யாவும் நயன்தாராவும் அங்கிட்டு திரிஞ்சாங்களாம்’ என்று எழுதுகிற அளவுக்கு இருவர் நட்பும் ஒரு காலத்தில் பிரசித்தி! இப்போதென்னவாம்? பழசையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு “மறுபடியும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கலாமா?” என்கிறாராம் ஆர்யா. மார்க்கெட்டில் டவுன் டவுன் என்றாகிக் கிடக்கும் அவருடன் ஜோடி சேர்ந்தால் இமேஜ் என்னாவது?
“நிறைய படம் கமிட் பண்ணிட்டேன். சுத்தமா நேரம் இல்லே” என்கிறாராம் நயன். “மாப்ளே… உனக்காக நான் என் சொந்தக் காசை போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். நயன்தாராவை கூட்டிட்டு வர்றது உன் பொறுப்பு” என்று அவரது உற்ற நண்பர் ஜீவா சொல்லியதால்தான், ஆணானப்பட்ட ஆர்யா நயன் வீட்டு வாசலில் தவம் கிடக்கிறார். எப்படி கால்ஷீட் பெறுவது?
வேணும்னா ‘விக்னேஷ்’வரன் ஆலயத்தில் விளக்குப் போட்டு மாவிளக்கு படைச்சு பாருங்களேன் ஆர்யா!