மீண்டும் சிலிர்க்க வைக்கிறாருப்பா இந்த ஆர்யா!

ஆர்யாவின் இமேஜில் ஆயிரம் பூக்கங்களை தூவிய விஷயம் அண்மையில் நடந்த மீகாமன் பஞ்சாயத்து விவகாரம்.

‘மீகாமன்’ ரிலீசுக்கு ஆர்யா தனது மூன்று கோடி சம்பளத்தை விட்டுக் கொடுத்து மேலும் மூன்று கோடிக்கு ஷ்யூரிடி போட்டு படத்தையும் ரிலீஸ் செய்ய வைத்தாரில்லையா? எல்லா முயற்சியும் நிழலுக்கு காட்டிய குடையாகிவிட்டதுதான் சோகம்! சொற்ப தியேட்டர்களிலேயே படத்தை வெளியிட முடிந்தது. மீதி தியேட்டர்களையெல்லாம் இதே தேதியில் வெளியான இந்த இன்னொரு படத்திற்காக வளைத்துக் கொண்டார் அந்த தியேட்டர் மாஃபியா.

இதனால் மீகாமன் படத்தின் வசூலில் பயங்கர ஓட்டை. மக்கள் தியேட்டருக்கு வரும்போது அங்கு மீகாமனுக்கு பதிலாக வேறொரு படம் ஓடிக் கொண்டிருந்தால் கலெக்ஷ்ன் எப்படி வரும்.? வேறு வழியில்லாமல் அதே தயாரிப்பாளரும் அதே இயக்குனரும் ஆர்யாவிடம் மூக்கு சிந்த, ‘அதுக்கென்ன… மறுபடியும் கால்ஷீட் தர்றேன். பிழைச்சுக்கோங்க’ என்று கூறியிருக்கிறாராம் ஆர்யா.

இப்படியொரு மனுஷன் கோடம்பாக்கத்திலிருந்தா, அந்த ஏரியாவுக்கு மட்டும் மாசம் மும்மாரி பொழியும் போலிருக்கே?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கசமுசா பண்ண விடமாட்டேன்! ஜி.வி.பிரகாஷை தடுப்பது யார்?

முனிஸ்வரனுக்காக கெடா வெட்டி முருகேசன் ஏப்பம் விட்ட கதையா ஆகிடும் போலிருக்கு பொங்கல் ரிலீஸ்! அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ வராது என்றவுடனேயே குட்டி குட்டி படங்கள் நான்...

Close