அஜீத்தின் மேனேஜரானார் ஆர்யா!

தலைப்பை படித்துவிட்டு தலைகுழம்பி போகிறவர்கள், பின்வரும் தொடர்ச்சியை படித்துவிட்டு கூல் ஆகிவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

பொதுவாக ஒரு முன்னணி ஹீரோவை அப்ரோச் செய்து கதை சொல்ல வேண்டும் என்றால், அது ஏழு கடல் தாண்டி மல்லாந்து படுத்துக் கொண்டே நீந்தும் ஆமையின் முதுகிலிருக்கும் மச்சத்தை தொட்டு வணங்குவதற்கு சமம். இப்படி கோடம்பாக்கத்தில் நாளைய இயக்குனர் கனவோடு அலைந்து கொண்டிருப்பவர்கள் ஏராளம் ஏராளம். அத்தனை பேரும் மார்க்கெட்டில் டாப்பில் இருக்கும் ஓரிரு ஹீரோக்களை மட்டும் குறி வைத்தால் என்னாவது? எக்ஸ்சேஞ்ச் ஜாம் ஆனது போல, சர்க்யூட் ஸ்தம்பித்துப் போகும் அந்த ஹீரோக்கள் தனக்கு கீழே சிலரை நியமித்து வர்றவங்களை ஃபில்டர் பண்ணி அனுபுங்க என்பார்கள். அப்படியெல்லாம் எம்பி குதித்து, எக்ஸ் போல வளைந்து கதை சொல்லி கடைசியில் கால்ஷீட் வாங்குவதற்குள் அடுத்த ஜென்மம் எடுத்திருப்பார் சம்பந்தப்பட்ட இயக்குனர்.

ஆனால் இங்கேயும் சிபாரிச்சு ஆள் இருந்தால் சிக்கலே இல்லை. இந்த சிபாரிசு வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கே தேவைப்படுகிறது என்பதுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். அண்மையில் ஆர்யாவின் சிபாரிசின் பேரில் அஜீத்திற்கு கதை சொல்லிவிட்டு திரும்பியிருக்கிறார்கள் இருவர். ஒருவர் ராஜாராணி இயக்குனர் அட்லீ. மற்றொருவர் எஸ்.எம்.எஸ், ஓ.கே.ஓகே, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் இயக்குனர் ராஜேஷ் எம்.

கதையை கேட்டுட்டு அஜீத் ….ம் சொன்னாரா? அதுல்ல முக்கியம்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஜய், சூர்யா, விக்ரமை வம்புக்கு இழுத்த விவேக்?

வாய் வளர வளர வாய்ப்பு குறைய ஆரம்பிக்குதுன்னு அர்த்தம். விவேக்கை போல உச்சாணிக் கொம்பில் ஏறி நுனி கிளையை ஆட்டிய நடிகரே இல்லை. அந்தளவுக்கு பிஸி பிஸி...

Close