இது அடுத்த கடமை! ஆஸ்கர் ரவிச்சந்திரனை காப்பாற்றுகிறார் ரஜினி?

இன்னும் செரிக்கவேயில்லை. அதற்குள் இன்னொரு கடப்பாரை பக்கோடாவா? இப்படியொரு அதிர்ச்சி கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வருகிறது. அதுவும் நேற்று காலையிலிருந்தே….. வேறொன்றுமில்லை, அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்றொரு தகவல் வெளியான அடுத்த வினாடியிலிருந்தே வயிற்றெரிச்சலில் குமுறிக் கொண்டிருக்கிறது ஒரு குழு. எல்லாருமே ரஜினிக்கு கதை சொல்லிவிட்டு காத்திருந்தவர்கள். அதிலும், கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்களுக்கு கடும் அதிர்ச்சியாம். ஏன்? அவரும் ரஜினிக்கு கதை சொன்ன இயக்குனர்கள் லிஸ்ட்டில் இருக்கிறாரே?

இதற்கிடையில்தான் இந்த தகவல். சமீபத்தில் தனது சொத்துக்களை வங்கியிடம் அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? ஆஸ்கர் ரவிச்சந்திரனின் இந்த இக்கட்டான நிலைமைக்கு கை கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் ரஜினி. சுமார் இருபதாண்டுகளுக்கும் மேலாக ரஜினியிடம் கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். என்ன காரணத்தாலோ அதை காது கொடுத்து கேட்டும், செயல்படுத்தாமல் இருந்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஜினியை சந்தித்துவிட்டு வந்தார் ரவிச்சந்திரன். அந்த சந்திப்புக்கான காரணத்தை அவர் கூறிய போது, தெலுங்கில் ஐ படம் வெளிவர ரஜினி சார் உதவினார். அதனால் நன்றி சொல்வதற்காக நேரில் சென்றேன் என்றார்.

ஆனால் இந்த சந்திப்புக்கான அர்த்தம் இப்போது மெல்ல மெல்ல விலகி வருகிறது. சுந்தர்சியிடம் கதை கேட்டு, அதிலும் நடிக்கலாம் என்று நினைத்திருந்த ரஜினி, அதை செயலாக்கப் போகிறார். ஒருபுறம் அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்திலும், இன்னொருபுறம் சுந்தர்சி இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறாராம். ஒரு படம் பொங்கலுக்கு, ஒரு படம் தீபாவளிக்கு என்றெல்லாம் திட்டமிட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத அதே நேரத்தில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் எந்த தீபாவளிக்கு? எந்த பொங்கலுக்கு? என்பதுதான் சுற்றிவிட்ட பம்பரம் போல தலைசுற்ற வைக்கிறது.

Read previous post:
அடுத்த பிறவியில் கமல்ஹாசனின் தங்கையாக பிறக்க வேண்டும்! நடிகை ஷகிலா மனந்திறந்த பேட்டி

இந்த பேட்டி நடிகை ஷகிலாவை பற்றிய இன்னொரு பார்வையை தரும் என்பதில் சந்தேகமில்லை. மிக தெளிவான, அழுத்தமான அவரது பதில்களை கேட்கும் ரசிகர்களுக்கு ஷகிலாவை பற்றிய எண்ணங்கள்...

Close