கத்திக்கு ஆதரவாக மக்கள் பவரை காட்டணும்! இலங்கைக்கு ‘விசிட் ’ போன அசின் ஆக்ரோஷம்!
தன் மீது பாய்ந்த குண்டூசி, விஜய் மீது கடப்பாரையாக மோதுவதை சற்று கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறார் நடிகை அசின். கலையையும் அரசியலையும் மிக்ஸ் பண்ணாதீங்க என்று அவர் தனது ட்விட்டரில் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல, கத்தி படத்திற்கு இடையூறு செய்கிறவர்களுக்கு முன் அந்த படத்தை வெற்றியடைய வைத்து மக்கள் தங்கள் பவரை காட்டணும் என்று கூறியிருக்கிறார்.
சும்மாவா பின்னே?
நடுவில் இலங்கைக்கு டூர் போய் இங்குள்ள உணர்வாளர்களிடம் சிக்கியவராச்சே அசின்? இவரை வைத்து யார் படமெடுத்தாலும், அந்த படத்தை எதிர்ப்போம் என்று இவர்கள் குரல் கொடுக்க, எதுக்குடா வம்பு என்று அசினின் போட்டோவை அதற்கப்புறம் நோக்கவில்லை தமிழ்சினிமா இயக்குனர்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழ் படங்களை தன் வாழ்வில் கண்ட நல்ல சொப்பனம் போல நினைத்துக் கொண்டிருக்கிறார் அசினும். அந்த சொப்பனம் இனிமேல் பலிக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.
இந்த நிலையில்தான் இந்த கத்தி பிரச்சனையை விடாமல் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் அவர். ஏற்கனவே அசின் மீது தாங்கொணா கோபத்திலிருக்கும் தமிழின உணர்வாளர்கள் இந்த ட்விட்டுகளுக்கு பின், என்ன செய்யப் போகிறார்களோ?
இருந்தாலும் முட்டையில மீசை வரைஞ்ச மாதிரிதான் இருக்கு அசினின் கோபம்.