கபாலி ரஜினியின் கோட்டு இப்போ அதர்வாவுக்கு! பொறுமை முக்கியம் பாஸ்…
தமிழ்சினிமாவில் சாதிக் கதையை படமெடுக்கும் இயக்குனர்கள், அவரவர் சாதியை உயர்த்தி பிடிப்பது அவ்வப்போது நடப்பதுதான். இனி பாரதியார் பற்றி படமெடுத்தாலும், பூணூலை பிரதானமாக காட்டுகிற அளவுக்கு சாதிக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பித்துவிட்டது படைப்பாளிகள் மனசு! இந்த நிலையில்தான் “என் சமூகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்று தெள்ளந் தெளிவாக கூறிவிட்டார் பா.ரஞ்சித். “கோட்டு போடுறதுதான் உனக்கு பிரச்சனைன்னா நான் போடுவேண்டா…” என்கிற அவரது கம்பீரக் குரலுக்கு சப்போர்ட் பாதி, சவுண்டு மீதியாக இருந்தாலும், மீண்டும் ரஜினியின் கால்ஷீட் என்பது ரஞ்சித்தின் தைரியத்துக்கு கிடைத்த வெற்றியன்றி வேறில்லை!
பா.ரஞ்சித்துக்கு ரஜினியின் கால்ஷீட் எப்போது என்பது இன்னும் வெளிப்படையாக தெரியவில்லை. அதற்குள் அவர் தனது திரைக்கதையை மெருகேற்றிக் கொள்வார் என்று நம்பலாம். (கபாலியின் சொதப்பல் இனிமேலும் நிகழக்கூடாதில்லையா) அப்படியே அந்த வேலையோடு வேறு படங்களை தயாரிக்கவும், வேறொரு படத்திற்கு கதை வசனம் எழுதித்தரவும் சம்மதித்திருக்கிறார் ரஞ்சித். அவரது இணை இயக்குனர் ஒருவர் இயக்கவிருக்கும் படத்திற்கு இவர்தான் கதை வசனம்.
இந்தப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் கசிகிறது. 1973 ம் வருடத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்வைதான் கதையாக வடித்திருக்கிறாராம் ரஞ்சித். மறுபடியும் கோட்டு, கொள்கைன்னு வாரி விட்றாதீங்க ஐயா.
ஏன்னா ரஜினி பேச வேண்டிய வசனங்களை அதர்வா பேசினா உலகம் ஐயோன்னு ஆயிடும்!