அட்லீ விஜய் படக்கதை இதுதான்! வெளிவராத தகவல்!
இமிடேஷன் இல்ல… இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி சொல்லியே பழைய பானையில் கையை விட்டு திருடுவது சினிமாக்காரர்களுக்கு கைவந்த கலை. ஐயய்யோ என் படத்தை அப்படியே அடிச்சுட்டார் என்று கோர்ட்டுக்கு போகிறவர்களுக்கு மட்டும், கொஞ்சமாவது பணம் கிடைக்கும். அட இவய்ங்களை திருத்த முடியாதுப்பா… என்று ஒதுங்கிப் போகிறவர்களுக்கு மாங்கா பிஞ்சு கூட மிஞ்சுவதில்லை.
இப்படி களவாடிய பொழுதுகளில் காலத்தை கழிக்கிற விஷயத்தில் அட்லீக்கு நிகர் அவரே! அவரது முதல் படமான ராஜா ராணி, மவுன ராகத்தின் மறு ஜெராக்ஸ். அவரது இரண்டாவது படமான தெறி, சத்ரியன் படத்தின் மறு ஜெராக்ஸ். அப்படியென்றால் அவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் விஜய்61 எந்தப்படத்தின் கதை? இந்த சந்தேகம் ரசிகர்களுக்கு வருமல்லவா? இந்த முறை ஒரு பய புத்தியிலேயும் சிக்கக் கூடாது என்று முடிவெடுத்த அட்லீ, வெற்றி விழா படத்தையும் வேறொரு ஆங்கிலப்படத்தின் கதையையும் அப்படியே அடித்து விஜய் 61 ல் செருகிவிட்டாராம்.
அதுதான் ‘பார்ன் சுப்ரமசி’ என்ற ஹாலிவுட் படம் என்று காதைக் கடிக்கிறது ஏரியா. கதைப்படி விஜய் ஒரு போலீஸ் ஆபிசர். ஒரு ஆக்சிடென்ட்டில் அவரது நினைவுகள் மறந்துவிடுகின்றன. தான் யார் என்பதை கண்டுபிடிக்கக் கிளம்புகிறார். இன்னொரு பக்கம் போலீஸ் இவரை தேடி வருகிறது. ஒரு நல்ல ஆபிசருக்கு இப்படியாகிவிட்டதே… அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகதான் இப்படி போலீஸ் தேடுகிறது. ஆனால் அது புரியாத விஜய் போலீஸ் கண்ணிலும் தப்பி, தான் யார் என்ற உண்மையையும் கண்டுபிடிப்பதே கதை. இதில் பார்ன் சுப்ரமசியை கலந்தால் விஜய் 61 ரெடி!
எப்பவே திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமல்லவா? இந்தப்படத்தையும் ஹிட் பட வரிசையில் சேர்த்துவிடுவார் அட்லீ. கூட்டிக் கழித்துப் பார்த்தால் வெற்றிதானே பேசும்? அந்த வகையில் அட்லீயை குட்டுவதை விட, முதுகில் தட்டுவதே மேல்!
https://youtu.be/a0T_rzSf3ok